
பிரமாண்டமான தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பார்க்கப்படும் கலைப்புலி தாணுவின் அடுத்த படைப்பு 60 வயது மாநிறம் .
தலைப்பு ஏதோ போலீஸ் ஸ்டேஷனில் காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு போல ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, விக்ரம்பிரபு மூவரும் நடித்து இருக்கிறார்கள்.
முதல் முறையாக இளையராஜா இசையில் இணைகிறார் ராதாமோகன்.
தாத்தா சிவாஜி, அப்பா பிரபு, மகன் விக்ரம்பிரபு என மூன்றாவது தலைமுறைக்கு இசையமைக்கிறார் இளையராஜா.
படம் தொடஙகியதே தெரியாமல் முடித்து ஆகஸ்ட் மாதம் திரையிட இருக்கிறார் தயாரிப்பாளர் தாணு.

414 Views
