
திமுக தலைவர் கலைஞர் உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில சிகிச்சை பெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுதும் கலைஞர் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது.
இந்த வதந்திகளுக்கு பதில் சொல்லும் விதத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா, கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டது.
கலைஞர் படுக்கையில் சாய்ந்து படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி தொண்டர்களை நிம்மதி படுத்தியது. அதே போல பல வதந்திகளுக்கு தடை போட்டது.
இந்த நிலையில் முதல் முறையாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் திமுக தலைவர் கலைஞரின் தெளிவான புகைப்படம் வெளியானது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து நலம் விசாரித்த போது எடுக்கப்பட்ட படம். கலைஞர் அவர்களிடம் மு.க.ஸ்டாலின் காதோரமாக குனிந்து ராகுல்காந்தி வந்திருப்பதை தெரிவிப்பது போல படம் உள்ளது.
இந்த புகைப்பட வெளியீட்டால் வதந்திகள் பரப்புவோருக்கும், திமுக தொண்டர்களுக்கும் தெளிவான பதிலை சொல்லியிருக்கிறது.

