புதன்கிழமை, மே 15
Shadow

300 தியேட்டர்களில் வெளியாகும் கலைப்புலி தாணுவின் 60வயது மாநிறம்!

 

 

 

300 அரங்குகளில் பிரமாண்டமாய் வெளியாகும் கலைப்புலி தாணுவின் 60வயது மாநிறம்!

படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்புக்கும் உரிய படமாக மாறியிருக்கிறது கலைப்புலி தாணுவின் அடுத்த வெளியீடான 60 வயது மாநிறம். ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, விக்ரம் பிரபு நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

தனது பெருமைக்குரிய தயாரிப்பாக கலைப்புலி தாணுவே அறிவித்துள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

தமிழகத்தில் மட்டும் இந்தப் படத்துக்கு 300 அரங்குகள் கிடைத்துள்ளன. வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என 600-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது 60 வயது மாநிறம்.

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில், “உண்மையிலேயே எனது பெருமைக்குரிய தயாரிப்புகளில் இந்தப் படமும் ஒன்று. எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. அதற்கேற்ப நல்ல திரையரங்குகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

257 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன