வியாழக்கிழமை, ஆகஸ்ட் 20
Shadow

மருத்துவமனையில் திருமாவளவன் அனுமதி

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதால் அதற்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விழுப்புரத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோதும் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடற்சோர்வு, தூக்கமின்மை, நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பதால் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.  சென்னை திரும்பிய பிறகு இன்று காலை மீண்டும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

367 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன