தொடர்ந்து லீக் ஆகும் விஜய் பட காட்சிகள்!
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், 'வாரிசு' திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருவதாக கூறப்படுகிறது.
அதாவது, இப்படத்தில் இடம்பெறும் ரஞ்சிதமே.. ரஞ்சிதமே என்ற பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளாராம்.
இந்த பாடலை தான் தீபாவளியன்று படக்குழு...




