புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: ott

தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி ரிலீசுக்காக வரிசைகட்டும் புதுப்படங்கள்!

தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி ரிலீசுக்காக வரிசைகட்டும் புதுப்படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி ரிலீசுக்காக வரிசைகட்டும் புதுப்படங்கள்! தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக, தமிழக அரசு அனைத்து தியேட்டர்களையும் மூடி உள்ளது. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த பல படங்கள் ஓடிடி தளங்களின் பக்கம் திரும்பி உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடக்கின்றன. விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், கடைசி விவசாயி, துக்ளக் தர்பார் ஆகிய 5 படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. இதில் துக்ளக் தர்பார் படத்தை ஓடிடியில் வெளியிட ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது ஓடிடியில் வெளியிடுவது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் பீட்சா படத்தின் 3-ம் பாகத்தையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வ...
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் திரிஷாவின் மற்றொரு படம்!

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் திரிஷாவின் மற்றொரு படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் திரிஷாவின் மற்றொரு படம்! எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் சரவணன், அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘ராங்கி’. இப்படத்திற்கான கதை மற்றும் வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். ‘ராங்கி’ என்றால் அடங்காத, துணிச்சல் மிகுந்த பெண் என்று பொருள். படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன. இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ராங்கி படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் திரிஷாவின் ‘பரமபத விளையாட்டு’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது....
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’!

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’! தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால் அரசு இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்து உள்ளது. இதனால் சினிமாத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் தினமும் இரவுக் காட்சிகளை ரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் தான் திரையரங்கிற்கு அதிக கூட்டம் வரும். அன்று முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளதால் கடும் நஷ்டம் ஏற்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தயாரிப்பாளர்கள் கவனம் மீண்டும் ஓடிடி தளங்கள் பக்கம் திரும்பி உள்ளது. அந்தவகையில், விஜய் சேதுபதி நடிப்பில் உர...
தியேட்டரில் ரிலீசாகும் அதே நாளில் ஓடிடி-யிலும் வெளியாகும் சல்மான் கான் படம்!

தியேட்டரில் ரிலீசாகும் அதே நாளில் ஓடிடி-யிலும் வெளியாகும் சல்மான் கான் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தியேட்டரில் ரிலீசாகும் அதே நாளில் ஓடிடி-யிலும் வெளியாகும் சல்மான் கான் படம்! பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘ராதே’. பிரபுதேவா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும். ராதே படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை கடந்தாண்டு ரம்ஜான் பண்டிகையன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படம் ரிலீசாகவில்லை. இதனால் கடந்த ஓராண்டாக வெளியிடப்படாமல் முடங்கிக் கிடந்த இப்படம் இந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிடப்படும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் ராதே படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுமா? என கேள்வி எழுந...
கொரோனா பரவல் எதிரொலி… ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் டாக்டர்!

கொரோனா பரவல் எதிரொலி… ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் டாக்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கொரோனா பரவல் எதிரொலி... ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் டாக்டர்! நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். இளம் நடிகை பிரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை மார்ச் 26-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் சட்டசபை தேர்தல் காரணமாக படத்தின் ரிலீஸை தள்ளிவைத்தனர். இதையடுத்து ரம்ஜான் பண்டிகைக்கு இப்படம் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால், திரையரங்குகளில் 50 சதவீத...
ஓடிடி-யில் வெளியாகிறதா ‘தலைவி’? – படக்குழு விளக்கம்!

ஓடிடி-யில் வெளியாகிறதா ‘தலைவி’? – படக்குழு விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஓடிடி-யில் வெளியாகிறதா ‘தலைவி’? - படக்குழு விளக்கம்! ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை கடந்தாண்டு ஜூன் 26-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இதையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் மீண்டும் இயங்கத் தொடங்கியதால், படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது மீண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருவதால், திரையரங்குகளில் 50 % இருக்...
ரஜிஷா விஜயன் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ரஜிஷா விஜயன் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ரஜிஷா விஜயன் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி! மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார். இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற கர்ணன் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மலையாளத்தில் அவர் நடிப்பில் உருவாகி இருந்த ‘கோ கோ’ படம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்றுவந்த இப்படம், தற்போது திரையரங்குகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக ரஜி...
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் திரிஷா படம்!

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் திரிஷா படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் திரிஷா படம்! திரிஷா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை திருஞானம் இயக்கி இருக்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கடந்த வருடம் மார்ச் மாதமே இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் இப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. சுமார் ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்த இப்படத்தை தற்போது நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று ‘பரமபதம் விளையாட்டு’ படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்....
ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் அடுத்ததாக தயாரிக்கும் வெப் தொடர் !

ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் அடுத்ததாக தயாரிக்கும் வெப் தொடர் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் அடுத்ததாக தயாரிக்கும் வெப் தொடர் ! 75 ஆண்டுகளுக்கு மேலாக தரமான கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து, மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. அதன்படி திரில்லர் கதையம்சம் கொண்ட "தமிழ் ஸ்டாக்கர்ஸ்" என்ற வெப்தொடரை அந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஈரம், வல்லினம் போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் இப்படத்தை இயக்க உள்ளார். தமிழ் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்பட திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு ‘தமிழ் ஸ்டாக்கர்ஸ்’ என்ற தொடர் உருவாகிறது. சோனி லிவ் ஓடிடி தளத்தில் இந்த தொடரை வெளியிட உள்ளனர். இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளிவர இருக்கிறது....
OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்

OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்   விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் நெட்பிளிக்ஸ்OTT தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகில் படத்துக்குப் பிறகு விஜய் மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 14 மாலை 6 மணிக்கு மாஸ்டர் பட டீசர் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மாஸ்டர் பட டீசர் பெற்றது. சமீபகால...