ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி ரிலீசுக்காக வரிசைகட்டும் புதுப்படங்கள்!

தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி ரிலீசுக்காக வரிசைகட்டும் புதுப்படங்கள்!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக, தமிழக அரசு அனைத்து தியேட்டர்களையும் மூடி உள்ளது. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த பல படங்கள் ஓடிடி தளங்களின் பக்கம் திரும்பி உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடக்கின்றன.
விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், கடைசி விவசாயி, துக்ளக் தர்பார் ஆகிய 5 படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. இதில் துக்ளக் தர்பார் படத்தை ஓடிடியில் வெளியிட ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது ஓடிடியில் வெளியிடுவது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் பீட்சா படத்தின் 3-ம் பாகத்தையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மோகன் கோவிந்த் இயக்கி உள்ளார். அஸ்வின் முக்கிய கதாபாத்திரத்திலும், பவித்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும் நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷா நடித்துள்ள ராங்கி ஆகிய படங்களை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன