
“பேய் கொல்கிறதா… சைக்கோ கொலையாளியா… இல்ல இந்த இரண்டு பேரையும் தாண்டி வேற யாராவது இருக்கிறார்களா?” — இந்த கேள்வியை வைத்து இரண்டரை மணி நேரத்துக்கு மேல் பார்வையாளரை உட்கார வைக்கிறது ‘தி டார்க் ஹெவன்’.
பாலாஜி இயக்கத்தில் சித்து சித், தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் mystery crime thriller.
கதை என்ன?
தமிழ்நாடு–கேரள எல்லையில் இருக்கும் மெக்கரை என்ற மலைக்கிராமம். அங்கே ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஜூன் மாதத்தில் ஆண்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள்.
இதற்கு காரணம் வனதேவதையின் சாபம் என்று ஊர் மக்கள் நம்புகிறார்கள்.
அதே நேரத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரெஞ்சு ஆய்வாளர் எழுதிய ‘The Dark Heaven’ என்ற மர்ம புத்தகம் ஒருவரின் கையில் கிடைக்கிறது. அதில் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்கள், ஏன் ஒருவர் இறக்கப்போகிறார் என்பது வரை முன்கூட்டியே எழுதப்பட்டிருப்பது கதைக்கு இன்னொரு மர்ம அடுக்கை சேர்க்கிறது.
இந்த சூழலில் புதிதாக அந்த ஊருக்கு வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்து, தொடர்ச்சியான மரணங்களுக்குப் பின்னால் இருப்பது சாபமா, மனிதர்களா என்பதைத் தேடுகிறார். ஒரு கட்டத்தில் சித்து மனைவியும் பலியாகிறார். யார் தன் மனைவியை கொன்றது. தொடர் கொலைகளுக்கு யார் காரணம் என விடை தேடுவதுதான் கதை. சாதாரணமான ஒரு வரி கதையாக இருக்கலாம். அதற்குள் சஸ்பென்ஸ், திரில், பயம், நடுக்கம் என பல உணர்ச்சிகளை கலந்து கட்டி ஆடியிருக்கிறார் இயக்குனர்.
சித்து — படத்தின் முதுகெலும்பு
இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் சித்து, ஓவராக கத்தாமல், பில்டப் கொடுக்காமல் அமைதியான விசாரணை அதிகாரியாக நடித்திருக்கிறார்.
அவருடைய கதாபாத்திரத்திற்கு mass heroism கொடுக்காமல், “நான் போலீஸ்… எல்லாத்தையும் 5 நிமிஷத்தில் கண்டுபிடிச்சுடுவேன்” என்ற பாணியைத் தவிர்த்திருப்பது நல்ல விஷயம்.
கம்பீரமான body language மற்றும் restrained performance கதைக்கும், காட்சிகளுக்கும் பக்காவாக பொருந்துகிறது.
பேயா? சைக்கோவா?
இதுதான் படத்தின் முக்கியமான பலம்.
ஒரு பக்கம் வனதேவதையின் சாபம்.
இன்னொரு பக்கம் சைக்கோ கொலையாளி.
மூன்றாவது பக்கம் எதிர்காலத்தை முன்கூட்டியே சொல்லும் புத்தகம்.
இப்படி மூன்று வெவ்வேறு கோணங்களை இயக்குநர் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துகிறார்.
அதனால் “அடுத்த கொலை யார்?” என்ற கேள்வியை விட,
“இந்தக் கொலைகளுக்குப் பின்னால் உண்மையில் என்ன இருக்கிறது?”
என்ற கேள்விதான் சுவாரஸ்யமாகிறது.
‘The Dark Heaven’ புத்தகம் — நல்ல ஐடியா!
படத்தின் title-ஐ கதைக்குள் கொண்டு வந்திருப்பது சுவாரஸ்யமான முயற்சி.
புத்தகத்தில் எழுதப்பட்ட சம்பவங்கள் நிஜத்தில் நடக்க ஆரம்பிப்பது, குறிப்பாக மரணம் எப்போது, எப்படி, யாரால் ஏற்படும் என்பதற்கான clues வருவது thriller mood-ஐ உருவாக்குகிறது.
ஆனால் இயக்குநர் இங்கே கொஞ்சம் அதிகமாக முடிச்சுகளைப் போட்டுவிட்டாரோ என்ற உணர்வும் வருகிறது.
புத்தகம் + சாபம் + சைக்கோ கொலையாளி + பழைய சம்பவம் + தற்போதைய விசாரணை…
எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சொல்ல முயற்சிப்பதால் இரண்டாம் பாதியில் சில இடங்களில் குழப்பம் ஏற்படுகிறது.
BGM — இருட்டுக்கு உயிர் கொடுக்கிறது!
இந்த படத்தின் இன்னொரு முக்கியமான பலம் பின்னணி இசை.
மழை…
இரவு…
மலை…
காடு…
வெறிச்சோடிய சாலை…
மர்மமான வீடுகள்…
இவற்றோடு பின்னணி இசை சேரும்போது ஒரு uneasy feeling உருவாகிறது.
சக்தி பாலாஜியின் BGM பல காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.
Visuals எப்படி?
படத்தின் கதை நடக்கும் மலைப்பகுதி இந்த thriller-க்கு நல்ல atmosphere கொடுக்கிறது.
மழையும் இருட்டும் சேர்ந்து “எப்போது என்ன நடக்கும்?” என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.
ஆனால் சில காட்சிகள் தேவையை விட நீளமாக செல்கின்றன.
அதாவது,
“Scene நல்லாத்தான் இருக்கு… ஆனா இன்னும் கொஞ்சம் சீக்கிரம் அடுத்த scene-க்கு போயிருக்கலாம்!”
என்று சில இடங்களில் தோன்றுகிறது.
முக்கியமான பிரச்சினை — Screenplay!
இங்கேதான் ன் நம்ப பாணியில் சொல்லறதா இருந்தா… .
ஐடியா நல்லது.
மர்மம் நல்லது.
Atmosphere நல்லது.
Climax-க்கு முன்பான tension நல்லது.
ஆனால்…
எல்லா முடிச்சுகளையும் ஒரே நேரத்தில் அவிழ்க்க நினைத்ததால்தான் screenplay குழப்பம்….
முதல் பாதி tight.
இரண்டாம் பாதியில் narrative threads அதிகமாகி கொஞ்சம் குழப்பம்.
ஆனால் கடைசி கட்டத்தில் யார் கொலையாளி என்பதை எளிதாக guess செய்ய முடியாத அளவுக்கு suspense-ஐ காப்பாற்றி அடடே போட்டுக் கொள்கிறார் இயக்குனர்.
Climax எப்படி?
Spoiler சொல்ல மாட்டேன்.
ஆனால் ஒரு விஷயம் சொல்லலாம்:
“இவர்தான் கொலையாளி!” என்று நீங்கள் முடிவு செய்து உட்கார்ந்திருந்தால்… இயக்குநர் உங்களை வேறு பக்கம் திருப்ப அதிக வாய்ப்பு இருக்கிறது. இதுதான் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது…
மொத்தத்தில்…
‘தி டார்க் ஹெவன்’ — முழுக்க பேய் படம் கிடையாது.
முழுக்க போலீஸ் investigation படமும் கிடையாது.
முழுக்க psycho killer படமும் கிடையாது.
இந்த மூன்றையும் கலந்து ஒரு மர்மமான crime thriller கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி. அவருக்கு ஒரு சபாஷ் போடலாம்.
சில இடங்களில் screenplay தடுமாறினாலும், முதல் பாதையின் tension, மலைக்கிராமத்தின் இருண்ட atmosphere, BGM, சித்துவின் நடிப்பு மற்றும் unpredictable climax படத்தை தாங்கி நிற்கின்றன.
ஒரே வரியில் சொன்னால்:
“சாபமா… சைக்கோவா… புத்தகமா… என்னடா இந்த Dark Heaven? முடிவு வரைக்கும் மூளையை வேலை வாங்குறான் பாலாஜி… ஆனா அந்த மூளைக்கு கொஞ்சம் அதிகமா வேலை கொடுத்துட்டாரே இயக்குனர்!”
கோடங்கி மதிப்பீடு: 3 / 5
