திங்கட்கிழமை, மே 13
Shadow

Tag: ott

ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் 1 கோடி பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்த “உடன்பால்” திரைப்படம் !

ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் 1 கோடி பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்த “உடன்பால்” திரைப்படம் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில், டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் சார்லி நடிப்பில் சமீபத்தில் வெளியான “உடன்பால்” திரைப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, 1 கோடி பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், சார்லி, 'சேதுபதி' பட புகழ் நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, KPY தீனா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் நடிப்பில் ஆஹா தளத்தில் வெளியான திரைப்படம் “உடன்பால்”. குடும்ப பின்னணியில் இன்றைய சமூகத்தில் உறவுகள் பணத்திற்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை அற்புதமான ப்ளாக் காமெடியில் சொல்லியிருந்தது இந்த திரைப்படம். மேலும் இன்றைய சமூகத்தில் நம் தாய்தந்தையரிடம் நாம...
சந்தாதாரர்களுக்கு திரைப்பட டிக்கட்டுகளை இலவசமாக வழங்கவுள்ள புதிய ஒடிடி தளம்!

சந்தாதாரர்களுக்கு திரைப்பட டிக்கட்டுகளை இலவசமாக வழங்கவுள்ள புதிய ஒடிடி தளம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள்
    சந்தாதாரர்களுக்கு இலவச திரைப்பட டிக்கட்டுகளை வழங்கவுள்ள theaterhoods.com அமெரிக்காவை சேர்ந்த பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க், “theaterhoods.com” (தியேட்டர்ஹுட்ஸ்.காம்) என்ற புதிய ஒடிடி தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் செயல்பாடுகளை இந்தியாவில் விரிவுபடுத்துகிறது.   தியேட்டர்ஹுட்ஸ் இந்திய மண்டல மார்க்கெட்டிங் தலைவர் பிரசாத் வசீகரன் கூறுகையில், "இந்திய சினிமா ரசிகர்களை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். ஒரு இந்தியனாக நமது திரைப்படங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இது நம் வாழ்க்கையின் ஒரு பகுதி, நமது ரத்தத்தில் கலந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எங்கள் பயனர்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் விரும்பும் முறையில் உள்ளடக்கத்தை ரசிக்க செய்வதே எங்கள் முதன்மையான குறிக்கோள் ஆகும்," என்றார்.   "உலகத்தரம...
படத்தை விட அதிக சம்பளம்…. வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்!

படத்தை விட அதிக சம்பளம்…. வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
படத்தை விட அதிக சம்பளம்.... வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்! கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது. இந்த தொடர்கள் திரைப்படங்களைப்போல் காதல், ஆக்‌ஷன், மர்மம், பிரம்மாண்டம் என்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு சினிமாவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. சமீபத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த தொடரில் நடிக்க அவர் ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து இன்னொரு வெப் தொடரில் நடிக்க சமந்தாவுக்கு ரூ.8 கோடி சம்பளம் கொடுக்க பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சமந்தா, சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் வாங்கினார் எ...
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறதா கீர்த்தி சுரேஷ் படம்?

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறதா கீர்த்தி சுரேஷ் படம்?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறதா கீர்த்தி சுரேஷ் படம்? கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார். விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனிடையே குட்லக் சகி திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப...
இனி ஓ.டி.டி.யே வேண்டாம்… சல்மான் கான் அதிரடி முடிவு!

இனி ஓ.டி.டி.யே வேண்டாம்… சல்மான் கான் அதிரடி முடிவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இனி ஓ.டி.டி.யே வேண்டாம்... சல்மான் கான் அதிரடி முடிவு! பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், பரத், மேகா ஆகாஷ், திஷா பதானி ஆகியோர் நடித்த ராதே இந்தி படம் கொரோனாவால் தியேட்டர்களுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் ரம்ஜான் தினத்தன்று வெளியிடப்பட்டது. பணம் செலுத்தி படம் பார்க்கும் முறையில் இந்த படத்தை வெளியிட்டு இருந்தனர். ஆனால், படமோ ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 249 ரூபாய் செலுத்தி படம் பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததால், ராதே படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதனிடையே, ரசிகர்கள் பலர் திருட்டு இணையதளத்தில் படத்தை பார்த்தது குறித்தும் சல்மான் கோபமடைந்தார். படத்தைக் கிண்டலடித்து விமர்சனம் செய்தவர் மீது சல்மான் கான் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சல்மானின் இந்த நடவடிக்கை ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ராதே படத்தை ஓடிடி-யில் வெளியிட்டதால், அடுத்தடுத்து சர்ச்சைகளில...
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘எப்.ஐ.ஆர்’ !

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘எப்.ஐ.ஆர்’ !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘எப்.ஐ.ஆர்’ ! தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘எப்.ஐ.ஆர்’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை ஓடிடி-யில் வெளிய...
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விஜய் சேதுபதி படம்!

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விஜய் சேதுபதி படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விஜய் சேதுபதி படம்! கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக இருந்த படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. தனுஷின் ஜகமே தந்திரம் படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இதுபோல் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படமும் இணைந்துள்ளது. இப்படத்தை இந்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், கடைசி விவசாயி படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்...
சிம்பு – ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை கோரி இயக்குனர் வழக்கு!

சிம்பு – ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை கோரி இயக்குனர் வழக்கு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES
சிம்பு - ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை கோரி இயக்குனர் வழக்கு! நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், தனக்கு தெரியாமல் படத்தை முடித்து, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முயற்சிகள் நடப்பதாகவும், படத்தை வெளியிட தடை கோரியும் இயக்குனர் யு.ஆர்.ஜமீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், படத்தை இயக்க தனக்கு 24 லட்சம் ரூபாய் ஊதியம் தருவதாக ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம், இதுவரை 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்துள்ளதால், மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்ட...
அடுத்தடுத்து ஓடிடி-யில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

அடுத்தடுத்து ஓடிடி-யில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அடுத்தடுத்து ஓடிடி-யில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள் - ரசிகர்கள் உற்சாகம்! மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம், கடந்த ஏப்ரல் 9-ந்தேதி ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், கர்ணன் படம் இரண்டு வாரம் மட்டுமே திரையிடப்பட்டது. இதனால் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அதன்படி இப்படம் வருகிற மே 14-ந் தேதி ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படமும் வருகிற ஜூன் மாதம் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது. சுமார் ஒரு மாத இடைவெளியில் தனுஷ் நடித்துள்ள இரண்டு படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இதில் குறிப்பாக ஜகமே தந்திரம் படம் 17...
ஓடிடி-யில் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 26 படங்கள்!

ஓடிடி-யில் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 26 படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஓடிடி-யில் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 26 படங்கள்! இயக்குனர் மணிரத்னம் தமிழில் ‘பகல் நிலவு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் ‘மௌன ராகம்’, ‘நாயகன்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘தளபதி’, ‘ரோஜா’, ‘பம்பாய்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 26 படங்கள் டிஜிட்டலில் மாற்றப்பட உள்ளதாம். இதற்கான பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த 26 படங்களும் டிஜிட்டலில் மாற்றப்பட்ட பின் வரிசையாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில், கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம...