புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: தமிழக சட்டசபை தேர்தல் 2021

மணிப்பூரில் வேட்பாளர் தந்தையின் மீது துப்பாக்கி சூடு!

மணிப்பூரில் வேட்பாளர் தந்தையின் மீது துப்பாக்கி சூடு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  மணிப்பூர் மாநிலத்தில் வருகிற 27 மற்றும் அடுத்த மாதம் 5-ந்தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல்  நடைபெறுகிறது. இதையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டுவேட்டையாடி வருகின்றனர். ஆண்ட்ரோ தொகுதியில் தேசிய மக்கள் கட்சி சார்பில் சஞ்சோய்சிட் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தந்தை சம்ஜய்சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பது தெரியவில்லை. வேட்பாளர் சஞ்சோய்சிட் கடந்த மாதம்தான் பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி தேசிய மக்கள் கட்சியில் சேர்ந்தார். இதனால் தேர்தல் முன் விரோதம் காரணமாக இந்த ச...
கவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்!

கவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்!

HOME SLIDER, NEWS, politics, திரைப்படங்கள்
கவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்! தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு 159 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. தி.மு.க. 125 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தனி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் அரியணையை அலங்கரிக்கிறார். தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைவதற்கான ஏற்பாடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கின. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினரையும் சேர்த்து 133 எம்.எல்.ஏ.க்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அண்ணா அறிவாலயத்தில் கூடி மு.க.ஸ்டாலினை ஒருமனதாக போட்டியின்றி சட்டசபை தி.மு.க. தலைவராக தேர்வு செய்...
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர். மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 75 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள...
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- முன்னணி நிலவரம் நாளை காலை 11 மணிக்கு தெரியும்!

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- முன்னணி நிலவரம் நாளை காலை 11 மணிக்கு தெரியும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- முன்னணி நிலவரம் நாளை காலை 11 மணிக்கு தெரியும்! தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளன. அறைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 75 மையங்களில் எண்ணப்படுகின்றன. இதற்காக தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்க...
தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது!

தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது! தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சர் யார் என்ற கேள்வியுடன், தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சென்னையில் 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணி மேரி, லயோலா, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட...
நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை- தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு!

நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை- தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை- தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு! தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6-ந் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. மின்னணு ஓட்டு எந்திரங்கள் மூலமாக வாக்குப்பதிவு முடிவடைந்ததும் அன்று இரவே அனைத்து மின்னணு எந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓட்டு எண்ணும் மையங்கள் அனைத்திலும் 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்டிராங் ர...
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றியை கொண்டாட தடை!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றியை கொண்டாட தடை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றியை கொண்டாட தடை! தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளில் சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவில், “கரூர் தொகுதி ஓட்டுக்களை எண்ணும் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்து இருந்தேன். ஆனால் இதுவரை பதில் இல்லை” என்று கூறி இருந்தார். ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தை அளித்தது. கூடுதலாக 6 மேஜைகள் போடப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அ...
மாதவராவ் ஜெயித்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

மாதவராவ் ஜெயித்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மாதவராவ் ஜெயித்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்! ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மரணம் காரணமாக அந்த தொகுதியில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. வேட்பாளர் மரணத்தால் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட மாட்டாது. அந்த தொகுதியில் பதிவான வாக்குகள் திட்டமிட்டபடி மே 2-ந்தேதி எண்ணப்படும். அந்த தொகுதி தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதன் அடிப்படையில் தான் அடுத்தகட்ட முடிவுகள் மேற் கொள்ளப்படும். மாதவராவ் அந்த தொகுதியில் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்....
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை!

தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை! தமிழக சட்டசபைக்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், களத்தில் நிற்கின்றன. இதுதவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவையும் நிற்பதால் தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், கி‌ஷன்ரெட்டி மற்றும் உத்தரப...
அடையாறு சாஸ்திரி நகரில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்!

அடையாறு சாஸ்திரி நகரில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அடையாறு சாஸ்திரி நகரில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்! தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி நாளை (ஞாயிறு) சென்னை வருகிறார். காலை 11.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் ராகுல் அங்கிருந்து கார் மூலம் வேளச்சேரி வருகிறார். வேளச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மவுலானாவை ஆதரித்து அடையாறு சாஸ்திரி நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் சைதாப்பேட்டை தி.மு.க. வேட்பாளரும், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளருமான மா.சுப்பிரமணியன் கலந்து கொள்கிறார். ராகுல் பிரசார கூட்டத்தில் 10 ஆயிரம் பேரை திரட்ட ஏற்பாடுகள் நடக்கிறது. சென்னை பிரசாரத்தை முடித்து கொண்டு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு ராகுல் செல்கிறார். அங்கு மதிய உணவை அருந்தி விட்டு முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பிற்பகல் 2...