சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: விஜய் சேதுபதி

5-வது முறையாக விஜய் சேதுபதி பிரபல இயக்குனருடன்  கூட்டணி!

5-வது முறையாக விஜய் சேதுபதி பிரபல இயக்குனருடன் கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
5-வது முறையாக விஜய் சேதுபதி பிரபல இயக்குனருடன் கூட்டணி! சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமானார். நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தேசிய விருதையும் வென்றது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கியிருந்தார் சீனு ராமசாமி. சில பிரச்சனைகளால் அந்த படம் வெளியாகவில்லை. இதையடுத்து விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து, சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ வெற்றிப்படமாக அமைந்தது. இதன் பின்னர் விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி 4-வது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, மீண்டும் இயக்குனர் சீனு ராமசாமியுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இவர்கள் இருவரும் 5-வது முறையாக இணையும் பட...
விஜய் சேதுபதி கே.ஜி.எப். இயக்குனருடன் கூட்டணி!

விஜய் சேதுபதி கே.ஜி.எப். இயக்குனருடன் கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சேதுபதி கே.ஜி.எப். இயக்குனருடன் கூட்டணி! கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக சலார் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சலார் படத்தை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே சைரா நரசிம்மா ரெட்டி, உப்பென்னா...
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விஜய் சேதுபதி படம்!

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விஜய் சேதுபதி படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விஜய் சேதுபதி படம்! கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக இருந்த படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. தனுஷின் ஜகமே தந்திரம் படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இதுபோல் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படமும் இணைந்துள்ளது. இப்படத்தை இந்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், கடைசி விவசாயி படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எ...
‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசிலுக்கு என்னென்ன கதாபாத்திரம்!

‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசிலுக்கு என்னென்ன கதாபாத்திரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசிலுக்கு என்னென்ன கதாபாத்திரம்! நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதேபோல் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தில் நடிகர் கமல் போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் பஹத் பாசில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும், நடிகர் விஜய் சேதுபதி தாதாவாக நடிக்க உள்ளதாகவும் ...
பாலா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஆர்.கே.சுரேஷ்!

பாலா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஆர்.கே.சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாலா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஆர்.கே.சுரேஷ்! மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில்  ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ‘ஜோசப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே அதன் தமிழில் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹீரோயினாக பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய நடிகர் ஆர்.கே.சுரேஷ், முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருந்ததாகவும், இயக்குனர் பாலா தான் தன்னை பரிந்துரைத்ததாகவும் அவர் கூறி உள்ளார். மேலும் இப்...
சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி!

சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர், தற்போது சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார். உலகம் முழுவதும் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சி தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்கிறார்கள். அந்த நிகழ்ச்சியை தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். ‘மாஸ்டர் செஃப் இந்தியா - தமிழ்’ என்ற பெயரில் இந்நிகழ்ச்சி தயாராகியுள்ளது. உலகளவில் பிரபலமான இந்நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதால், இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏற்கனவே ரசிகர்களிடம் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக இந்நிகழ்ச்சி அமையு...
முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி!

முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி! தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகிலிருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலரும் அவருக்கு நேரிலும் சமூக வலைதளம் மூலமும், தொலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள். இந்த நிலையில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அவர்கள் 14 கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் உள்பட 14 கோரிக்கைகள் அவர்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாகவும், அந்த கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றும்படியும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் கையெழுத்து போட்டு கொடுத்திருப்பதாக தகவல்கள்...
நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் மலையாள படம்!

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் மலையாள படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் மலையாள படம்! நடிகர் விஜய்சேதுபதி, கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘மார்க்கோனி மத்தாய்’ என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து இந்து வி.எஸ் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் 19 (1)(a) என்கிற மலையாள படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்தப்படத்தில் ஹீரோயினாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி எழுத்தளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனம், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாம். இதேபோல் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் உருவாகி உள்ள துக்ளக் தர்பார் படமும் ஓட...
விஜய் சேதுபதிக்காக ‘விடுதலை’ படத்தில் அதிரடி மாற்றம் செய்த தயாரிப்பாளர்!

விஜய் சேதுபதிக்காக ‘விடுதலை’ படத்தில் அதிரடி மாற்றம் செய்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சேதுபதிக்காக ‘விடுதலை’ படத்தில் அதிரடி மாற்றம் செய்த தயாரிப்பாளர்! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இணைந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் ‘விடுதலை’ படத்தை தமிழில் மட்டுமே வெளியிட திட்டமிட்டிருந்த தயாரிப்பாளர், விஜய் சேதுபதியின் வருகையாலும், அவருக்கு தெலுங்கு, இந்தி போன்ற திரையுலகில் இருக்கும் மார்க்கெட் காரணமாக பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார். அதன்படி தம...
கொரோனா பாதிப்பு எதிரொலி…. விஜய் சேதுபதியின் பாலிவுட் பட ஷூட்டிங் ஒத்திவைப்பு!

கொரோனா பாதிப்பு எதிரொலி…. விஜய் சேதுபதியின் பாலிவுட் பட ஷூட்டிங் ஒத்திவைப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கொரோனா பாதிப்பு எதிரொலி.... விஜய் சேதுபதியின் பாலிவுட் பட ஷூட்டிங் ஒத்திவைப்பு! இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘அந்தாதூன்’. 3 தேசிய விருதுகளை வென்ற இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பும் நடிக்க ஒப்பந்தமாகினார். இப்படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் 15-ந் தேதி தொடங்க திட்டமிட்டு இருந்தனர். அந்த சமயத்தில் நடிகை கத்ரீனா கைப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால், படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்ட போதிலும், நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருவதால், படப்பிடிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளனர். இதுதவிர நடிகர் விஜய் சேதுபதி காந்தி டாக்கீஸ், மும்பைகார் போன...