சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: விஜய் சேதுபதி

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன்

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள். காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். `சூப்பர் டீலக்ஸ்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘சிந்துபாத்’ திரைப்படம் உருவாகியுள்ளது....
விஜய்சேதுபதியின் மகன் திருடன் …இது ‘சிந்துபாத்’ அப்டேட்!

விஜய்சேதுபதியின் மகன் திருடன் …இது ‘சிந்துபாத்’ அப்டேட்!

CINI NEWS, செய்திகள்
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய அருண்குமார், மீண்டும் விஜய் சேதுபதி நடிக்க ‘சிந்துபாத்’ படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியானது. இந்த படத்தில் நடிகை அஞ்சலி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதியின் மகனான சூர்யாவும் இந்த படத்தில் அறிமுகமாகிறார். டீஸரில் கூட விஜய் சேதுபதி, சூர்யாவை கழுத்தில் தூக்கி வைத்திருப்பது போன்ற ஒரு காட்சியும் வரும். ஏற்கனவே நானும் ரௌடிதான் என்ற படத்தில் குட்டி விஜய் சேதுபதியாக கொஞ்ச நொடிகளே வந்திருப்பார். இதை அடுத்து சிந்துபாத் படம் முழுவதுமாக நடித்திருக்கிறார் என்று படக்குழுவே தெரிவித்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியும், அவரது மகன் சூர்யாவும் திருடர்கள் போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது....
தாய்லாந்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி!

தாய்லாந்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பாகுபலி 2 வெற்றிப் படத்தை வெளியிட்ட பட நிறுவனம் S.N.ராஜராஜனின் கே.புரொடக்‌ஷன்ஸ்..அத்துடன் ராணா ரெஜினா சத்யராஜ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் தமிழில் மடை திறந்து தெலுங்கில் 1945 படங்கலையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது. கே புரொடக்சன்ஸ் எஸ்.என்.ராஜராஜன்,  ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர்ராஜா,  இர்பான் மாலிக்  இணைந்து சூப்பர் ஹிட் டான பியார் பிரேமா காதல் வெற்றிப் படத்தை  தொடர்ந்து விஜய் சேதுபதி அஞ்சலி  நடிக்கும் புதிய படம் ஒன்றையும்  தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் 30நாட்கள் நடை பெற்று முடிவடைந்தது... இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. 40 நாட்கள் இடை விடாமல் தாய்லாந்து அதை சுற்றி உள்ள இடங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப் பட உள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் இப்பட...
நாங்கள் உண்மையில் காதலிக்க வில்லை – கௌரி

நாங்கள் உண்மையில் காதலிக்க வில்லை – கௌரி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘96’. பிரேம் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா கதாநாயகியாகா நடித்திருக்கிறார். மேலும் இதில் விஜய் சேதுபதி, திரிஷாவின் பள்ளி பருவ காட்சியில் ஆதித்யா பாஸ்கரும், கௌரியும் நடித்திருந்தார்கள். ஆதித்யாவும் கௌரியும் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களை பெருமளவு கவர்ந்திருக்கிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இதையடுத்து இவர்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் பரவியது. இதையறிந்த கௌரி, நாங்கள் இருவரும் காதலிக்க வில்லை. 96 திரைப்படத்தில் ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் காதலர்களாக நடித்தோம். திரைக்குப் பின்னால் இல்லை. எங்களைப் பற்றி தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்’ என்று கூறியிருக்கிறார்...