வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

Tag: விஜய்

உள்ளாட்சி தேர்தல்… பச்சைக்கொடி காட்டிய விஜய்!

உள்ளாட்சி தேர்தல்… பச்சைக்கொடி காட்டிய விஜய்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகி விட்டன. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலில், விஜய் படம், விஜய் மக்கள் இயக்க கொடியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறு...
விஜய் குறித்து தனி நீதிபதி அளித்த கருத்துகளை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

விஜய் குறித்து தனி நீதிபதி அளித்த கருத்துகளை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
    தனி நீதிபதி கூறிய கருத்துக்ளை நீக்கக்கோரி நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அந்த கருத்துகளை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் விஜய், லண்டனில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோல்ட் காரை வாங்கினார். இதற்கு இறக்குமதி வரியாக கிட்டத்தட்ட 2 கோடியை செலுத்தியிருந்தார். இருப்பினும், அந்த காரை வட்டார போக்குவரத்து அதிகாரியின் அலுவலகத்தில் பதிவுசெய்யும் போது, வணிக வரித்துறையில் நுழைவு வரியை செலுத்தி சான்று வாங்கிவருமாறு கூறப்பட்டது. இந்த வரியை செலுத்தவேண்டிய அவசியமில்லை என கேரள மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் சிலவற்றில் குறிப்பிட்டுள்ளதாக கூறி இந்த வரியை நடிகர் விஜய் செலுத்த மறுத்திருந்தார்.   எனினும், நுழைவு வரியை கட்டாயம் செலுத்தவேண்டும் என வணிகத்துறை உத்தரவிட்டதால் அதை எதிர்த்து வழக்கு தொ...
கலகலனு கலாட்டாவாக வெளிவந்த ”குக் வித் கோமாளி சீசன் 3” ப்ரோமோ வீடியோ!

கலகலனு கலாட்டாவாக வெளிவந்த ”குக் வித் கோமாளி சீசன் 3” ப்ரோமோ வீடியோ!

HOME SLIDER, TV news
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற  நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் குக் வித் கோமாளி 3வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த  நிலையில் , சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 படப்பிடிப்பு துவங்கியது என தகவல் வெளிவந்தது. ஆனால் இதில் யார்யாரெல்லாம் கலந்துகொண்டுள்ளார்கள் என்று எந்த  தகவலும்  வெளிவராத  நிலையில், தற்போது காத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கும் வகையில் குக் வித் கோமாளி சீசன் 3 ப்ரோமோ முதல் முறையாக வெளியாகியுள்ளது. இதில், பாரதி கண்ணம்மா ரோஷினி, நடிகர் சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ், உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்...
முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்…. வைரலாகும் புகைப்படம்!

முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்…. வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்.... வைரலாகும் புகைப்படம்! விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது புத்தாண்டை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் முகத்தில் ரத்தகாயத்துடன் இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு..!

விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் - யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு..! விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சந்தித்து இருக்கிறார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் அடுத்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார் என்று பதிவு செய்து வருகிறார்கள்.  ...
விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்!

விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்! தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்தது. தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன். இதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஊடகத்தில் பார்த்திபன் பேசும்போது, எனக்கு விஜய்க்கு கதை சொல்லி அவரை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதுவும் விரைவில் நடக்கும் என்று கூறியிருக்கிறார். நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு!

விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் - சூர்யா திடீர் சந்திப்பு! நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதே சன் ஸ்டூடியோவில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் இரண்டு படங்களில் படப்பிடிப்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சன் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் விஜய் - சூர்யா இருவரும் நட்பு ரீதியாக சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது....
மீண்டும் ஜார்ஜியா செல்லும் விஜய்!

மீண்டும் ஜார்ஜியா செல்லும் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் ஜார்ஜியா செல்லும் விஜய்! விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. ஆனால் அங்கு படமாக்கி வந்தபோது கொரோனா தொற்று அதிகமாக பரவத் தொடங்கியதால் திட்டமிட்டபடி அனைத்து காட்சிகளையும் படமாக்காமலேயே படக்குழு இந்தியா திரும்பியது. அதையடுத்து சென்னை, டில்லி என்று படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 75 சதவிகிதத்தை கடந்து விட்டது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் பீஸ்ட் படக்குழு ஜார்ஜியா செல்லவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சண்டை காட்சி உள்ளிட்ட சில முக்கியத்துவமான காட்சிகளை படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது....
இது பதவி அல்ல பொறுப்பு – தேர்தலில் வென்ற மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை!

இது பதவி அல்ல பொறுப்பு – தேர்தலில் வென்ற மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
இது பதவி அல்ல பொறுப்பு - தேர்தலில் வென்ற மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை! தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டத்துக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களின் இந்த வெற்றி அரசியல் வட்டத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் தேர்தலில் தன் படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்று விஜய் கண்டிப்பாகக் கூறி, தடை போட்டிருந்தார். ஆனாலும் சோர்வடையாத விஜய் ரசிகர்கள் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். தேர்தலில் நின்ற பல நிர்வாகிகள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்க நிர்வாகிகளை அண்மையில் நேரில் அழைத்து பாராட்டினார் விஜய். அந்த சந்திப்பின் போது நடிகர் விஜய் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அவர்களிடம், “இது பதவி அல்ல பொறுப்பு என்பதை உ...
தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் விஜய் – வைரலாகும் புகைப்படம்!

தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் விஜய் – வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் விஜய் - வைரலாகும் புகைப்படம்! விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களின் இந்த வெற்றி அரசியல் வட்டத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் தேர்தலில் தன் படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்று விஜய் கண்டிப்பாகக் கூறி, தடை போட்டிருந்தார். ஆனாலும் சோர்வடையாத விஜய் ரசிகர்கள் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். தேர்தலில் நின்ற பல நிர்வாகிகள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து  பாராட்டியிருக்கிறார் விஜய். மேலும் வெற்றி பெற்றவர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது....