புதன்கிழமை, மே 15
Shadow

Uncategorized

சி.பி.எஸ்.சி தேர்வில் 97.4 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பாதி பார்வை குறைபாடு கொண்ட மாணவி சாதனை

சி.பி.எஸ்.சி தேர்வில் 97.4 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பாதி பார்வை குறைபாடு கொண்ட மாணவி சாதனை

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
பீகார் மாநிலத்தை சேர்ந்த, லாவண்யா ஜா எனும் பாதி பார்வை குறைபாடு உடைய மாணவி தான் விரும்பிய  பாடத்திட்டம் பீகாரில் இல்லாத காரணத்தினால் தனது பெற்றோரை விட்டுவிட்டு டெல்லியில் உள்ள விடுதியில் தங்கி கல்வி பயின்றார். 12ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்த நிலையில் சி.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே லாவண்யா ஜா 97.4 சதவிகித மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தேர்வு முடிவுகளுக்கு பின்னர் லாவண்யா ஜா பேசியதாவது :- எனக்கு உள்ள பார்வை குறைபாடு எனது  கல்வியை பாதிக்க நான் அனுமதிக்கவில்லை. அதை ஒரு தடையாகவும் நான்               பொருட்படுத்தவில்லை. தினமும் தேர்வுக்கு 3 மணி நேரம் படித்து எண்னை தயார் செய்துகொண்டேன். தேர்வு எழுதும் போது கூடுதல் நேரம் அனுமதி வாங்கி எழுதினேன். அடுத்ததாக கல்லூரி படிப்...
20 மாநிலங்களில் பாஜக ஆட்சி – 4 ஆண்டு கால மத்திய அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்: மோடி பெருமிதம்

20 மாநிலங்களில் பாஜக ஆட்சி – 4 ஆண்டு கால மத்திய அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்: மோடி பெருமிதம்

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 26-5-2014 அன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில் இன்றுடன் இந்த அரசின் நான்காண்டு கால ஆட்சி நிறைவடைகிறது. இதை முன்னிட்டு ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில் மகாநதி நதிக்கரையில் உள்ள பாலி ஜாத்ரா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். தனது தலைமையிலான நான்கு ஆண்டு ஆட்சி பற்றி பிரதமர் மோடி பேசியதாவது :- நாட்டின் 125 கோடி மக்களை வாழ்த்தி ஜகன்நாதரின் பூமியில் இருந்து பேசுவது எனது கிடைத்த அதிர்ஷ்டம் ஆகும். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த இடம் இது. மக்களின் கனவுகள் மற்றும் அவர்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையே என்னை தொடர்ந்து பணியாற்ற தூண்டுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் உள்ள பலரும் ஏழ்மையில் வாழ்ந்தவர்கள். அதனால் தான் ஏழைகளின் நலனுக்கு இந்த அரசு அதிக முக்கியத்...
மார்ச் 27-ல் இருந்து முதல் உலை செயல்படவில்லை – ஸ்டெர்லைட் நிறுவனம் விளக்கம்

மார்ச் 27-ல் இருந்து முதல் உலை செயல்படவில்லை – ஸ்டெர்லைட் நிறுவனம் விளக்கம்

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த 1993-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பின் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு அப்போது இருந்தே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிறுவனத்திலிருந்து வெளிவந்த கழிவுகள் காரணமாக அப்பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிகப்பட்டனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக ஒப்புதல் வேண்டி விண்ணப்பித்திருந்தது. இதனை எதிர்த்து கடந்த 100 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் மக்களின் போராட்டம் கலவரமாக வெடித்ததில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும் துப்பாக்கிச்சூடு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளனர். இந்நிலையில், ப...
தூத்துக்குடியில் மேலும் ஒரு இடத்தில் துப்பாக்கிச்சூடு – பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

தூத்துக்குடியில் மேலும் ஒரு இடத்தில் துப்பாக்கிச்சூடு – பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று பொதுமக்களின் போராட்டம் 100-வது நாளை எட்டியது. இதையொட்டி ஏற்கனவே பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்ட குழுவினருடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு தரப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக கூறினார்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மற்றும் போராட்ட குழுவினர் திட்டமிட்டப்படி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்தார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள போலீஸ...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் – ராகுல் கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் – ராகுல் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனமும், வேதனையும் வெளியிட்டுள்ளார். ’ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 9 பேரை போலீசார்...
மக்களை பிரித்து மோதலை தூண்டுகிறது பாஜக – ராகுல் குற்றச்சாட்டு

மக்களை பிரித்து மோதலை தூண்டுகிறது பாஜக – ராகுல் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக சத்தீஸ்கர் மாநிலம் சென்றுள்ளார். இன்று பிலாஸ்பூர் பகுதியில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுடன் கலந்துரையாடிய அவர், தொண்டர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார். அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மக்களின் எந்த பிரச்சனை குறித்தும் பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பினார். ‘எங்கெல்லாம் பாஜக ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள், இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள். மக்களை பிரித்து அவர்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்ளும்படி பாஜக செய்கிறது. ‘உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ ஒரு பெண்ணை கற்பழித்தார். ஆனால் அதுகுறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, பிரதமர் வழிகாட்டியாக இருக்க வேண்டும் இல்லையெனில் நாடு திக்கற்று போகும்’ என ராகுல் காந்தி தெரிவித்தார். ...
சீனா – உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் சோதனை ஓட்டம் நிறைவு

சீனா – உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் சோதனை ஓட்டம் நிறைவு

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
சீனாவிடம் ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்தான் இருந்து வந்தது. இதையடுத்து, இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்துக் கட்டி உள்ளது. இந்த கப்பல் கடந்த சில தினங்களுக்கு முன் லயோனிங் மாகாணத்தில் உள்ள டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப்பட்டது. இந்நிலையில், சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் தனது ஐந்து நாள் கடல் சோதனை ஓட்டத்தை இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடல் சோதனை, பயிற்சிகளுக்கு பின்னர் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல், 2020-ம் ஆண்டுக்கு முன்பாக அந்த நாட்டின் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனா 3-வதாக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை ஷாங்காயில் வடிவமைத்து கட்டி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 2030-ம் ஆண்டுக்குள் 4 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை பெற்றிருக்க வேண...
25 வினாடிகள் முந்திச் சென்றதற்காக மன்னிப்பு கேட்ட ஜப்பான் ரெயில்வே துறை

25 வினாடிகள் முந்திச் சென்றதற்காக மன்னிப்பு கேட்ட ஜப்பான் ரெயில்வே துறை

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
ஜப்பான் நாட்டில் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்பதற்காக அனைத்து போக்குவரத்து வாகனங்களும் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டுச் செல்லும். இதேபோல், குறிப்பிட்ட இடத்தையும் சரியான நேரத்தில் சென்றடைவது வழக்கம். இந்நிலையில், ஜப்பான் நாட்டில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன் 25 வினாடிகள் முன்னதாகவே ரெயில் புறப்பட்டு சென்றதால் சிரமப்பட்ட பயணிகளிடம் ரெயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் நோட்டகவா என்ற ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் காலை 7.12 மணிக்கு ரெயில் புறப்பட்டுச் செல்லும். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 7.12 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில், சுமார் 25 வினாடிகள் முன்னதாக 7 மணி 11 நிமிடம் 35 வினாடிக்கு புறப்பட்டு கிளம்பி சென்றது. இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்ய இருந்த பயணிகள் வழக்கமாக செல்லும் ரெயில் இல்லாததை கண்டு கோபம் அடைந்தனர். பள...
டிரம்ப் கோல்ப் கிளப்பில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமி கைது

டிரம்ப் கோல்ப் கிளப்பில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமி கைது

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான கோல்ப் கிளப் உள்ளது. இந்த கோல்ப் கிளப் அருகில் நேற்று மர்ம நபர் சென்றார். அவர் தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் கோல்ப் கிளப்பின் உள்பகுதியை நோக்கி சரமாரியாக சுட்டார். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் மியாமி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து சென்று துப்பாக்கி வைத்திருந்த ஆசாமியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அந்த ஆசாமி ஏன் சுட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபருக்கு சொந்தமான கோல்ப் கிளப்பில் துப்பாக்கி சூடு நடந்தது மியாமி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
என்ஜினீயரிங் மவுசு குறைந்ததால் கலைக்கல்லூரிகளில் அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

என்ஜினீயரிங் மவுசு குறைந்ததால் கலைக்கல்லூரிகளில் அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியானதை தொடர்ந்து உயர் படிப்பிற்காக மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். ஆன்லைன் மூலமாக கல்லூரி களுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். என்ஜினீயரிங் படிப்பிற்கு கடந்த சில வருடங்களாக மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லை. பி.இ., பி.டெக் முடித்த லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலையில்லாமல் அலைந்து திரிகிறார்கள். உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு குறைந்து விட்டதால் பொறியியல் படிப்பு மீது இருந்த மோகம் படிப்படியாக குறைந்து விட்டது. என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்த ஆண்டு மூடப்படுகிறது. பல லட்சம் செலவு செய்து 4 ஆண்டுகள் பொறியியல் படித்து முடித்தாலும் அதற்கான வேலையோ, ஊதியமோ கிடைக்காததால் பொறியியல் படிப்பிற்கு பதிலாக கலை-அறிவியல் கல்லூரிகள் பக்கம் மாணவர்கள் நாடிச் செல...