Tag: சூரி
ராகவா லாரன்ஸ்-ன் காஞ்சனா 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'முனி'. இதன் இரண்டாம் பாகம் காஞ்சனா என்ற பெயரில் வெளிவந்தது.
இந்த நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், சத்யராஜ், கிஷோர், மனோபாலா, சூரி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஏப்ரல் 19-ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது....
கார்த்தி-விஜய்சேதுபதி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது
2011ம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகள், கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மொத்தம் 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி உள்ளிட்ட கலைத்துறைக்கான உயரிய விருதுகளை பெறும் கலை வித்தகர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2011ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளுக்கு நடிகர்கள் பாண்டு, ஆர். ராஜசேகர், நடிகை குட்டி பத்மினி, பிண்ணனிப் பாடகி பி.எஸ். சசிரேகா, நடன இயக்குநர் புலியூர் சரோஜா உள்ளிட்ட பல்வேறு கலைத்துறை சார்ந்த 30 கலை வித்தகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து 2012ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் நடிகைகள் டி. ராஜஸ்ரீ, பி.ஆர். வரலட்சுமி, இயக்குநர் சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட, பல்வேறு கலைப்பிரிவுகளை சேர்ந்த 30 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2013ம் ஆண்டுக்காக, நடிகர்கள் பிரசன்னா, ஆர். பாண்டியர...
கென்னடி கிளப் – மீண்டும் கபடி களத்தில் சுசீந்திரன்
சுசீந்திரன் இயக்கத்தில் ஜீனியஸ் படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் ஏஞ்சலினா, சாம்பியன் உள்ளிட்ட படங்களையும் இயக்கி முடித்துள்ளார். இந்த இரு படங்களின் பின்னணி வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.
அதன்படி சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். `கென்னடி கிளப்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சௌமியா, ஸிம்ரிதி, சௌந்தர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிக்க பாலிவுட்டில் இருந்து வில்லனை தேடிவருகிறார் சுசீந்திரன்.
பாண்டியநாடு, பாயும் புலி மற்றும் மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் இந்...

