வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: நரேந்திர மோடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முழு பயணத் திட்டம்! 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முழு பயணத் திட்டம்! 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முழு பயணத் திட்டம்! இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை (திங்கள்கிழமை) பிற்பகல் அகமதாபாத்திற்கு வருகிறார். இந்தியப் பயணத்தை சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தொடங்குகிறார் டிரம்ப். பிற்பகல் 12.15 மணிக்கு அவர் சபர்மதி ஆசிரமம் செல்கிறார். இதைத் தொடர்ந்து, பிற்பகல் 1.05 மணிக்கு மோட்டேரா மைதானத்தில் நடைபெறவுள்ள நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கும் டிரம்ப், அங்கு சுமார் 1,00,000 மக்களுக்கு முன்பு உரையாற்றுகிறார். இதையடுத்து, மாலை 3.30 மணிக்கு தன்னுடைய மனைவியுடன் ஆக்ரா வருகிறார். அங்கு மாலை 5.15 மணியளவில் இருவரும் தாஜ் மஹாலுக்குச் செல்கின்றனர். ஆக்ராவிலிருந்து மாலை 6.30 மணியளவில் டெல்லி கிளம்புகிறார். இதையடுத்து, செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு வழக்கமான அ...
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது தலைநகரான டெல்லியில் 70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவினாலும், உண்மையான போட்டி ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் நிலவுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்காக ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதாவும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் மீண்டும் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டது. டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவாகிற ஓட்டுகள், 11-ந்தேதி எண்ணப்படுகின்றன. அன்று மதியமே டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்த...
கங்கையை தூய்மைபடுத்த பிரதமர் மோடிக்கு சாதுக்கள் இயக்கம் கெடு..!

கங்கையை தூய்மைபடுத்த பிரதமர் மோடிக்கு சாதுக்கள் இயக்கம் கெடு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கங்கையை தூய்மைபடுத்த மோடிக்கு கெடுவிதித்த சாதுக்கள் இயக்கம்..! ‘மாத்ரி சதன்‘ என்ற சமூக-ஆன்மிக இயக்கத்தை சேர்ந்த பிரமச்சாரி ஆத்மபோதானந்தா என்ற சாது கங்கை ஆற்றை தூய்மை படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து 194 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார். கடந்த மாதம் 4-ந் தேதி, மத்திய மோடி அரசு கண்டிப்பாக தூய்மை படுத்துவோம் என வாக்குறுதி அளித்ததன்பேரில், அந்த சாது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். இந்நிலையில், அதே இயக்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், “கங்கையை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை ஜூன் 13-ந் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்ற தவறினால், அடுத்த கட்ட போராட்டத்துக்கான திட்டத்தை வகுப்போம்“ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்று ஒரு சில நாட்களில் சாதுக்கள...
குஜராத்தில் குடி தண்ணீர் கேட்ட பெண்ணை அடித்து உதைத்த பாஜக எம்.எல்.ஏ.வின் காட்டுமிராண்டிதனம்..!

குஜராத்தில் குடி தண்ணீர் கேட்ட பெண்ணை அடித்து உதைத்த பாஜக எம்.எல்.ஏ.வின் காட்டுமிராண்டிதனம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாக்லெட் பாய் மாதவன் எரிமலையாக பொங்கி இருக்கிறார்... அவர் படத்துக்காகவா இல்லீங்க... நாடே தவிக்கும் தண்ணீர் பிரச்சினைக்கு... பாஜக.ஆளும் மாநிலம் குஜராத். அதிலும் சமீபத்திய மெகா வெற்றிக்கு சொந்தக்கார பிரதமர் மோடியின் நிர்வாகத்தில் இருந்த மாநிலம். நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவது போல அங்கேயும் தண்ணீர் பஞ்சம். பலராம் தவானி என்ற பிஜேபி எம்.எல்.ஏ.வின் கட்சி ஆபீசுக்கு ஒரு பெண் சென்று குடிதண்ணீர் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவுடன் போய் பேச... அந்த நேரம் எம்.எல்.ஏ. அங்கே இருந்திருக்கிறார். இந்த பெண் பேசியதை கேட்க மறுத்து அந்த பெண்ணை அலுவலகத்தில் இருந்த ஒருவரை விட்டு அடித்து வெளியில் தள்ளியிருக்கிறார் எம்.எல்.ஏ. அப்போதும் ஆத்திரம் அடங்காத எம்.எல்.ஏ. தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறந்து தெருக்குழாயடி சண்டை போல ஆபீஸ் அறையில் இருந...
மோடி,அமீத்ஷாவை பாதுகாக்க தேர்தல் கமிஷனில் விதிமுறைகள் காலில் மிதிபடுகிறது – காங்கிரஸ் கண்டனம்

மோடி,அமீத்ஷாவை பாதுகாக்க தேர்தல் கமிஷனில் விதிமுறைகள் காலில் மிதிபடுகிறது – காங்கிரஸ் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேர்தல் கமிஷனில் எழுந்துள்ள பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், “தேர்தல் கமிஷன் விதிகள் ஒருமித்த முடிவுக்குத்தான் முன்னுரிமை தெரிவிக்கின்றன. ஆனால் ஒருமித்த முடிவு இல்லை என்கிறபோது பெரும்பான்மை முடிவை ஏற்கச்சொல்கிறது. அரசியல் சாசன அமைப்பு என்கிற வகையில், சிறுபான்மை முடிவும் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் மோடியையும், அமித் ஷாவையும் பாதுகாக்க இது மிதிபடுகிறது” என்று குறிப்பிட்டார். மேலும், “பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவும் தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியதாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. ஆனால் அவை குப்பைத்தொட்டியில் போடப்பட்டு விட்டன. இந்தியாவின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை அழிக்கிற பணியை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டுள்ளார்” ...
விவசாயிகளுக்கு ரூ.6000… திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர்!

விவசாயிகளுக்கு ரூ.6000… திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர்!

politics, செய்திகள்
2019 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ரூ.75,000 கோடி செலவில் 12 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித் தொகை அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில், நிகழாண்டில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.2,000 விதம், 3 தவணைகளாக ரூ.6,000 வரவு வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இன்று வரலாற்றில் முக்கியமான நாள். பிரதான் மந்திரி கிசான் திட்டம் கோராக்பூரில் துவங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டம் கடினமாக உழைத்து, இந்தியாவுக்கு உணவளிக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிப்.1ஆம் தேதி திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. திட்டம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலே இது நடைமுறைக்கு வந்தது. இதுவே புதிய இந்தியாவின், புதி...