வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: ஷங்கர்

இயக்குனர் ஷங்கருக்கு தடை இல்லை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இயக்குனர் ஷங்கருக்கு தடை இல்லை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இயக்குனர் ஷங்கருக்கு தடை இல்லை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு! ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தடை விதிக்க முடியாது என தனி நீதிபதி மறுத்துவிட்டார். இதை எதிர்த்து லைகா தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. இதன் விசாரணையின் போது, ஏற்கனவே லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல எனக்கூறி, லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது....
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து! இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர். கொரோனா பரவல் குறைந்த பின்னர் வ...
‘இந்தியன் 2’ பிரச்சனை எதிரொலி….ஷங்கருக்கு ராம்சரண் புதிய நிபந்தனை!

‘இந்தியன் 2’ பிரச்சனை எதிரொலி….ஷங்கருக்கு ராம்சரண் புதிய நிபந்தனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘இந்தியன் 2’பிரச்சனை எதிரொலி....ஷங்கருக்கு ராம்சரண் புதிய நிபந்தனை! கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் முடங்கியதால், இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாரானார். இதுபோல் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க உள்ளதாகவும் அறிவித்தார். இது சர்ச்சையானது. ‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்தப் பிரச்சினையில் இருதரப்புக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் தெலுங்கு, இந்திப் படங்களை இயக்க அனுமதிக்க வேண்டாம் என்று அங்குள்ள திரைப்பட வர்த்தக சபைகளுக்கும் ‘இந்தியன் 2’ பட நிறுவனம் கடிதம் அனுப்பி உள்ளது. இந்த சர்ச்சைகளை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க ராம்சரண் தயங்கு...
‘இந்தியன் 2’ தாமதம் ஆவதற்கு லைகா தான் காரணம் – ஐகோர்ட்டில் ஷங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

‘இந்தியன் 2’ தாமதம் ஆவதற்கு லைகா தான் காரணம் – ஐகோர்ட்டில் ஷங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
‘இந்தியன் 2’ தாமதம் ஆவதற்கு லைகா தான் காரணம் - ஐகோர்ட்டில் ஷங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு! நடிகர் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பல உண்மை தகவல்களை மறைத்து லைகா நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக இயக்குனர் சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். முதலில் இந்த படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்ததாகவும், பின் அவரை சமாதானப்படுத்தி, படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன் வந்ததாகவும் கூறியுள்ளார். கடந்த 2017 செப்டம்பரில் படத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டதாகவும், 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பைத் துவங்க முடிவு செய்ததாகவும் பதில் மனுவில் ...
ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்கும் சுதீப்!

ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்கும் சுதீப்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்கும் சுதீப்! ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் ராம்சரணுக்கு வில்லனாக கிச்சா சுதீப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஐ படத்தில் மலையாள நடிகர் சுரேஷ்கோபி, 2.O படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் என மற்ற மொழி ஹீரோக்களை வில்லனாக நடிக்க வைத்துள்ள ஷங்கர், இப்படத்திற்காக கன்னட நடிகர் சுதீப்பை அணுகி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
அன்பு நண்பரை இழந்துவிட்டேன் – கே.வி.ஆனந்த் மறைவுக்கு இயக்குனர் ஷங்கர் இரங்கல்!

அன்பு நண்பரை இழந்துவிட்டேன் – கே.வி.ஆனந்த் மறைவுக்கு இயக்குனர் ஷங்கர் இரங்கல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
அன்பு நண்பரை இழந்துவிட்டேன் - கே.வி.ஆனந்த் மறைவுக்கு இயக்குனர் ஷங்கர் இரங்கல்! பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. இவர் அயன், மாற்றான், கோ, அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கி உள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இயக்குனரும், கே.வி.ஆனந்துடன் முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களில் பணியாற்றியவருமான ஷங்கர், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “கே.வி.ஆனந்த் மறைந்த செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். என் இதயம் கனக்கிறது. என்னால் இதை ஏற்க முடியவில்லை. அன்பு நண்பரை இழந்துவிட்டேன். கே.வி.ஆனந்த், ஒரு அற்...
இந்தியன் 2 விவகாரம்…. லைகா – ஷங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி!

இந்தியன் 2 விவகாரம்…. லைகா – ஷங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இந்தியன் 2 விவகாரம்.... லைகா - ஷங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி! நடிகர் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காணுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கடந்த சனிக்கிழமையன்று, ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இரண்டரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், ஜூன் முதல் அக்டோபர்...
‘இந்தியன் 2’ பட ஷூட்டிங் எப்போது முடியும்? – ஐகோர்ட்டில் இயக்குனர் ஷங்கர் தகவல்!

‘இந்தியன் 2’ பட ஷூட்டிங் எப்போது முடியும்? – ஐகோர்ட்டில் இயக்குனர் ஷங்கர் தகவல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘இந்தியன் 2’ பட ஷூட்டிங் எப்போது முடியும்? - ஐகோர்ட்டில் இயக்குனர் ஷங்கர் தகவல்! கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. இதனிடையே, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஷங்கர் தயாராகி வருகிறார். அதேபோல் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கையும் இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார் ஷங்கர். இதனிடையே, இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்க தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது. ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிமன்றம், ஷங்கர் தரப்பு விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஷங்கர் தரப்பில...
ஷங்கர் படத்தில் சல்மான் கான்!

ஷங்கர் படத்தில் சல்மான் கான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஷங்கர் படத்தில் சல்மான் கான்! ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் ராம்சரணின் தந்தையுமான சிரஞ்சீவியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சல்மான் கானையும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் தயாராவதால் அந்தந்த மொழிகளில் உள்ள ...
‘இந்தியன் 2’ விவகாரம் – லைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு!

‘இந்தியன் 2’ விவகாரம் – லைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு!

HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
‘இந்தியன் 2’ விவகாரம் - லைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு! கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. இதனிடையே, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஷங்கர் தயாராகி வருகிறார். அடுத்து பாலிவுட்டிலும் ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தங்களது ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு எந்த ஒரு படத்தையும் ஷங்கர் இயக்கக் கூடாது என உத்தரவிடக்கோரி, நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. லைகா நிறுவனம் அளித்துள்ள புகாரில், “இந்தியன் 2 படத்திற்காக போடப்பட்ட 236 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இதுவரை 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டது...