திங்கட்கிழமை, நவம்பர் 2
Shadow

Tag: Ilayaraja

நீண்ட காலத்திற்குப் பிறகு அண்ணன் இளையராஜாவை சந்தித்த தம்பி கங்கை அமரன்!

நீண்ட காலத்திற்குப் பிறகு அண்ணன் இளையராஜாவை சந்தித்த தம்பி கங்கை அமரன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
    நீண்ட காலத்திற்குப் பிறகு இளையராஜாவும், அவரது தம்பி கங்கை அமரனும் சந்தித்துக் கொண்டார்கள். அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் அவரது குடும்பத்தார் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இளையராஜா குடும்பத்தில் மொத்தம் நான்கு சகோகாதரர்கள்.. மூத்தவர் பாவலர் வரதராஜன். கம்யூனிஸ்ட். ஊர் ஊராகச் சென்று தனது பாடல்களின் வழியாக கம்யூனிஸ்ட் கொள்கைகளை பரப்பியவர். தேர்தல் பிரச்சாரம் செய்தவர். அவர் காங்கிரஸுக்கு எதிராக பாடிய பாடலின் வடிவம்தான் இளையராஜா இசையமைத்த ஒத்த ரூபாயும் தாரேன்.. பாடல். அவருக்கு அடுத்து பாஸ்கர். அடுத்து இளையராஜா, கடைசியாக கங்கை அமரன். கடைசி மூவரும்தான் சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடினார்கள். பாவலர் சகோதரர்கள் என்பது அவர்களின் பெயர். நால்வரில் இப்போது இளையராஜாவும், கங்கை அமரனும் மட்டுமே இருக்கிறார்கள். பல படங்களில் ஒன்றாக பணிபுரிந்தி...
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி!

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜாவின் பாடல்களையும், இசையையும் ரசிகர்கள் கொண்டாடுவது அதிகரித்து வருகிறது. இதற்காகப் பல குழுக்கள் உருவாக்கப்பட்டுப் பாடல்களைப் பகிர்ந்து வருகிறார்கள். இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது என்றால் உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் அதில் கலந்து கொள்ள விரும்புகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஈ.வி.பி. திடலில் பிரமாண்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு சிங்கப் பூரில் கச்சேரி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அது தடைப்பட்டுப் போனது. பெரிய இடைவெளிக்குப் பிறகு சென்னையில் மீண்டும் இசைக் கச்சேரியை நடத்த இருக்கிறார் இளையராஜா. மார்ச் மாதம் நடக்க இருக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு ‘ராக் வித் ராஜா’ என்று தலைப்பி டப்பட்டுள்ளது....
தெய்வீக குரலால் உலக மக்களை தன்வசம் வைத்தவர் லதா மங்கேஷ்கர் – இளையராஜா வேதனை!

தெய்வீக குரலால் உலக மக்களை தன்வசம் வைத்தவர் லதா மங்கேஷ்கர் – இளையராஜா வேதனை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், வீடியோ
இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களாக லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாகவே இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை சற்று சீரடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது அவர் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு ஒரு வீடியோ பதிவின் மூலம் அவருடைய...
விண்வெளியில் ஒலிக்க இருக்கும் இசைஞானி இளையராஜா இசை!

விண்வெளியில் ஒலிக்க இருக்கும் இசைஞானி இளையராஜா இசை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
  விரைவில் விண்வெளியில் ஒலிக்க இருக்கும் இசைஞானி இளையராஜா இசை! இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். உலகத்திலேயே எடை குறைவான சாட்டிலைட் தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் அதிக எடையை குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளது. அதில் இளையராஜாவின் இசை இடம் பெறும் என தெரிகிறது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசையமைத்துள்ள பாடல் இடம்பெற்றுள்ள சாட்டிலைட...
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா!

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா! இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இளையராஜா இசையமைத்து வருகிறார்.  இந்த நிலையில் நேற்று இரவு உடல்நலக்குறைவால் இளையராஜா மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கிடையே தான் நலமுடன் இருப்பதாக இளையராஜாவே டுவிட்டரில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். 33 விநாடிகள் ஓடும் வீடியோவில் காரில் பயணிக்கும் இளையராஜா, தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ...
எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன தொழில்நுட்பத்தில் இசைஞானி வெளியிட்ட ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன தொழில்நுட்பத்தில் இசைஞானி வெளியிட்ட ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

HOME SLIDER, NEWS
  இசைமேதை' எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன தொழில்நுட்பத்தில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி. பக்தி பாடல்களை பாடி நம் கண் முன்னே இறைவனை கொண்டு வந்து நிறுத்திய தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர். இவர், திருமலை கோவிந்தனுக்கு வெங்கடேச சுப்ரபாதத்தை பாடிய இசைத்தட்டு 1963 ஆம் ஆண்டு வெளியானது. திருமாலின் புகழைப் பாடும் வெங்கடேச சுப்ரபாதம்; திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலிபரப்பு செய்தது மட்டுமின்றி : 1975 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக எம்.எஸ். சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டார். இத்தகைய சிறப்புமிக்க வெங்கடேச சுப்ரபாதத்தை இன்றைய தலைமுறையினர் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் புதிய அத்தியாய...
கடைசி நொடியிலும் என்னை பார்க்க ஆசைப்பட்ட SPB -இசைஞானி உருக்கம்

கடைசி நொடியிலும் என்னை பார்க்க ஆசைப்பட்ட SPB -இசைஞானி உருக்கம்

HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், வீடியோ
  கடைசி நொடியிலும் என்னை பார்க்க ஆசைப்பட்ட SPB -இசைஞானி உருக்கம்    https://youtu.be/0deqmLRnDxs
முதன்முறையாக இளையராஜா உடன் கூட்டணி அமைக்கும் பா.இரஞ்சித்!

முதன்முறையாக இளையராஜா உடன் கூட்டணி அமைக்கும் பா.இரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
முதன்முறையாக இளையராஜா உடன் கூட்டணி அமைக்கும் பா.இரஞ்சித்! அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்க உள்ளார். முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை பா.இரஞ்சித் இயக்கிய 5 படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார். அதனால் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கும் அவரே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பா.இரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் அடுத்ததாக இயக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த...
இளையராஜாவிற்கு பாட்டு பாடி  வாழ்த்து சொன்ன பாடகி சித்ரா!

இளையராஜாவிற்கு பாட்டு பாடி வாழ்த்து சொன்ன பாடகி சித்ரா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
இளையராஜாவிற்கு பாட்டு பாடி வாழ்த்து சொன்ன பாடகி சித்ரா! இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசைஞானியால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகிகளில் ஒருவர் சித்ரா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இளையராஜாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது: நீங்கள் எனக்கு ஒரு குருவாக, அப்பாவாக இருந்து அறிவுரை கூறி என்னை வழிநடத்தினீர்கள். உங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. இந்த கோவிட் பிரச்சனை காரணமாக ஒருத்தரை ஒருத்தர் பார்க்க முடியவில்லை. இந்த தருணத்தில் கடவுள் உங்களுக்கு நல்ல தீர்க்காயுசு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். இன்னும் 100 வருஷம் உங்களுடைய இசை பயணம் வெற்றிகரமாக அமை...
ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா!

ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா! இசைஞானி இளையராஜா இசையமைத்த "மதுரை மணிக்குறவன்" படத்தின் பாடல்களை அவரது புது ஸ்டூடியோவான இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் வெளியிட்டார். காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரிக்க ராஜரிஷி.கே இயக்கியுள்ளார். தூத்துக்குடி, மதுர சம்பவம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹரிக்குமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். படத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல்களையும் கவிஞர் முத்துலிங்கம் எழுதியுள்ளார். மனசில பெரியவன் தான் மதுரக்காரன்... என்ற பாடலை இளையராஜாவே பாடியுள்ளார். படத்தின் அனைத்து பாடல்களும் ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்துள்ளார். மதுரை மணிக்குறவன் படத்தின் பின்னணி இசை முதல் படமாக இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது. மதுரையில் நடந்த உண்மை சம்பவமும் பல கொலைக் குற்றங்களில் நிகழும் பின்னணி பற்றியும் உருவாக்கப்பட்ட கதை...