திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

Tag: TN Assembly election 2021

75 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை- மின்னணு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு!

75 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை- மின்னணு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
75 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை- மின்னணு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு! தமிழக சட்டசபை தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 2 சதவீதம் குறைவாகும். வழக்கமாக தேர்தல்களில் மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்து விடும். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டன. அந்த பணி முடிந்ததும் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. பின்னர் பலத்த பாதுகாப்பு டன் தேர்தல் ஆணையத்தின் வாகனத்தில் ஏற்றி ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 234 தொகுதிகளிலும் பதிவான வாக்க...
சைக்கிளில் வந்த விஜய்!

சைக்கிளில் வந்த விஜய்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சைக்கிளில் வந்த விஜய்! தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி ஆகியோர் வாக்குகளை செலுத்தினர். இதையடுத்து நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சைக்கிளில் வந்தார். விஜய் சைக்கிளில் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர். விஜய் வாக்களிக்க வந்து சென்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியிருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வை இப்படி குறியீடாக சொல்லியிருக்கிறார் என்று சமூகவலைத்தளத்தில் பேசப்பட்டது. இதனால், சைக்கிளில் வந்த நடிகர் விஜய் ஸ்கூட்டரில் திரும்பிச் சென்றார்....
தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குப்பதிவு: 5 மணிக்குப்பிறகு 8.19 சதவீதம் பதிவு!

தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குப்பதிவு: 5 மணிக்குப்பிறகு 8.19 சதவீதம் பதிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குப்பதிவு: 5 மணிக்குப்பிறகு 8.19 சதவீதம் பதிவு! தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் முழுவதுமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்தார். முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குகள் பதிவாகியிருந்தது. 11 நிலவரப்படி 26.29% வாக்குகளும், மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% சதவீதமும், மதியம் 3 மணி நிலவரப்படி 53.35% சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதமும் பதிவாகின. அதன்பின் மொத்தமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவானது. ஐந்து மணிக்குப்பிறகு 8.19 சதவீத வாக்குகள் பதிவாகின....
சினிமா நட்சத்திரங்கள் அஜித்,விஜய், ரஜினி,கமல் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்!

சினிமா நட்சத்திரங்கள் அஜித்,விஜய், ரஜினி,கமல் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தவண்ணம் உள்ளனர். பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே  நடிகர் அஜித் தன் மனைவி ஷாலினியுடன், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.  வாக்குப்பதிவு தொடங்கியதும், அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் வாக்களித்துவிட்டு புறப்பட்டுச்சென்றனர் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள். அதுபோல் சூர்யா, கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர். தற்போது நடிகர் வி...
தமிழகத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்- பாதுகாப்பு பணியில் 1.58 லட்சம் போலீசார்!

தமிழகத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்- பாதுகாப்பு பணியில் 1.58 லட்சம் போலீசார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்- பாதுகாப்பு பணியில் 1.58 லட்சம் போலீசார்! தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (6-ந் தேதி) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3,585 பேர் ஆண்கள். 411 பேர் பெண்கள். சட்டமன்ற தேர்தலில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 300 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 528 சாவடிகள் பதட்டமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மேற்பார்வையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மையங்களுக்...
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி!

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி! சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * தமிழகத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். * வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை வழங்கப்படும். * வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. * தமிழகத்தில் 50% வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். * வாக்குச்சாவடிகளில் எத்தனை பேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். * 21 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. * பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் உரிய ஆவணத்துடன் வாக்களிக்கலாம். * கொ...
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க முடியாது – அட்டர்னி ஜெனரல் 

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க முடியாது – அட்டர்னி ஜெனரல் 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க முடியாது - அட்டர்னி ஜெனரல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த 23-ந் தேதி பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘பல்வேறு மாநிலங்களில் பெரும்பான்மை பலம் பெற்ற ஆட்சியையும் பா.ஜ.க. கவிழ்த்துள்ளது. மத்திய அரசு ஜனநாயக ரீதியில் இயங்கவில்லை. நாடாளுமன்றத்தில் பலம் பொருந்தியதாக பா.ஜ.க உள்ளது. சி.பி.ஐ., வருமான வரித்துறை, தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டையும் கூட மத்திய அரசு பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது’ என குற்றம் சாட்டினார். இதில் மக்களை அச்சுறுத்த சுப்ரீம் கோர்ட்டை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என ஸ்டாலின் தெரிவித்திருப்பது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல் எனவும், அதன் சுதந்திரத்தன்மை அதிகாரத...
இன்று முதல் 3 நாட்களுக்கு கடைகள் மூடல்- ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை!

இன்று முதல் 3 நாட்களுக்கு கடைகள் மூடல்- ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இன்று முதல் 3 நாட்களுக்கு கடைகள் மூடல்- ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை! தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 6-ந்தேதி வரை 3 நாட்களுக்கு 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டிருக்கும். 'டாஸ்மாக்' கடைகள் மூடப்படும் தகவல் நேற்று அறிவிப்பாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்ததால் குடிமகன்கள் கூட்டம் ஒவ்வொரு மதுக்கடைகளிலும் அதிகம் காணப்பட்டது. துரைப்பாக்கம், கிண்டி, குன்றத்தூர், அம்பத்தூர், டி.பி.சத்திரம், புழல், மாதவரம், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, கோடம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி, ஆவடி, திருமுல்லைவாயல் உள்பட பல இடங்களில் மதுக்கடைகளில் முண்டியடித்தபடி மதுபாட்டில்கள் வாங்கினார்கள். ஒருசில இடங்களில்தான் வரிசையில் நின்று மதுபாட்டில்கள் வாங்கினார்கள்....
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை!

தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை! தமிழக சட்டசபைக்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், களத்தில் நிற்கின்றன. இதுதவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவையும் நிற்பதால் தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், கி‌ஷன்ரெட்டி மற்றும் உத்தரப...
புதுவை மாநிலத்தில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

புதுவை மாநிலத்தில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
புதுவை மாநிலத்தில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்! புதுவை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுவை சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி கடந்த 25-ந்தேதி முதல் 80 வயதுக்கு மேற்பட்டோர், கொரோனா நோயாளிகள், அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோரிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் வரை புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் 5 ஆயிரத்து 501 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் மொத்தம் ஆயிரத்து 558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளையும் இணையவழி மூலம் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளின் நுழைவு வாயில்களில் கண்காணிப்பு க...