
நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள். அதுபோல் சூர்யா, கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர். தற்போது நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து தனது வாக்கை பதிவு செய்திருக்கிறார்.

இதேபோல் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இன்று காலையிலேயே சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அவருடன் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசனும் உடன் வந்து, வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தினர்

