ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

90 வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடியில் 171 ஓட்டுகள் பதிவு – அசாமில் அதிர்ச்சி

 

அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்துக்கு உட்பட்ட ஹப்லாங் தொகுதியில் கடந்த 1-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதியில் கோட்லிர் பள்ளியிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த வாக்குச்சாவடியில் தகுதிவாய்ந்த மொத்த வாக்காளர் எண்ணிக்கை 90 ஆகும். ஆனால் வாக்குப்பதிவு முடித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பரிசோதித்த போது, 171 வாக்குகள் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தேர்தல் அதிகாரி, அந்த வாக்குச்சவாடியில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். மேலும் அந்த வாக்குச்சாவடியில் பணியில் இருந்த 5 அதிகாரிகளையும் இடைநீக்கம் செய்து அவர் உத்தரவிட்டு உள்ளார்.

அந்த வாக்குச்சாவடிக்கு தேர்தல் கமிஷன் வெளியிட்டிருந்த வாக்காளர் பட்டியலை ஏற்க மறுத்திருந்த கிராம தலைவர், தானே ஒரு வாக்காளர் பட்டியலை கொண்டு வந்து அதன்படி மக்களை ஓட்டுப்போட வைத்ததாக தேர்தல் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

அவர் கொடுத்த வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரிகள் ஏன் ஏற்றுக்கொண்டனர்? என்பது குறித்தும், இதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் பங்கு என்ன? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

90 வாக்காளர் கொண்ட வாக்குச்சாவடியில் 171 ஓட்டுகள் பதிவான சம்பவம் அசாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அசாமில் பாஜக எம்எல்ஏ ஒருவருடைய வாகனத்தில் இருந்து மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.எல்.ஏ. கார் ஒன்றில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பல இருப்பது சமூக ஊடகங்களில் வீடியோவாகப் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. கார் பதிவு எண் AS 10B 0022 இந்தக் கார், பாஜக வேட்பாளர் கிருஷ்ணேந்து பால் என்பவருடையது என்பதும் தெரியவந்தது. அசாம் பத்திரிகையாளர் ஒருவர் இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கதில் பதிவிட அது வைரலாகப் பரவியது, தீயாக பரபரப்பு ஏற்படுத்தியது.

 

 

174 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன