வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

சினி நிகழ்வுகள்

கொரோனா சிகிச்சை பெற்று வந்த அஞ்சான் பட நடிகர் காலமானார்!

கொரோனா சிகிச்சை பெற்று வந்த அஞ்சான் பட நடிகர் காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா சிகிச்சை பெற்று வந்த அஞ்சான் பட நடிகர் காலமானார்! கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் உயிரிழந்துள்ளார். இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தியில் பல படங்களில் நடித்து மிகப் பிரபலமானவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு வயது 52. இவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்....
அஜித்துடன் நடித்த காட்சியை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

அஜித்துடன் நடித்த காட்சியை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
அஜித்துடன் நடித்த காட்சியை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் இன்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் அஜித்தின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், ஏகன் படத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறி இருக்கிறார். நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்....
சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்!

சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்! தமிழில் சூது கவ்வும் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவர் தற்போது பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக அறிமுகமாகும் அழகிய கண்ணே படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சீனு ராமசாமியின் துணை இயக்குனர் விஜயகுமார் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கோணப்பட்டி கிராமத்தில் நடந்து வருகிறது. இதில் கிராமத்து மக்களும் கலந்து கொள்ள 100க்கும் மேற்பட்டவர்களை கொண்டு படப்பிடிப்பு நடந்தது. மேலும் கிராம மக்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க கூடியிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொரோனா தடுப்பு குழுவினர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றனர். குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாததால் படப்பிடிப்பு குழுவினருக்கு தடுப்பு பிரிவினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேற...
ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்… குவியும் லைக்குகள்!

ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்… குவியும் லைக்குகள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்... குவியும் லைக்குகள்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நடிப்பு, இசையைத் தவிர சமூகப் பொறுப்புணர்வோடு செயல்படும் நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படத்தில் ஒரு ஸ்டைலான மாஸ்க்கை நடிகை ஸ்ருதிஹாசன் அணிந்துள்ளார். அந்தப் புகைப்படத்தின் கேப்ஷனாக தமிழ் பொண்ணு அணிந்து இருக்கும் மாஸ்க் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைக்குகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறார்கள்....
கொரோனா பாதிப்பு… கே.வி.ஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாததால் கண்கலங்கிய குடும்பத்தினர்!

கொரோனா பாதிப்பு… கே.வி.ஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாததால் கண்கலங்கிய குடும்பத்தினர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
கொரோனா பாதிப்பு... கே.வி.ஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாததால் கண்கலங்கிய குடும்பத்தினர்! பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். நள்ளிரவில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், இதனால் அவரே காரை ஓட்டிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அதிகாலை 3 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக கே.வி.ஆனந்தின் மனைவி மற்றும் மகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த 24-ம் தேதி அன்று இயக்குனர் கே.வி.ஆனந்துக்கும் கொரோனா தொற்று இரு...
கே.வி.ஆனந்த் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

கே.வி.ஆனந்த் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
கே.வி.ஆனந்த் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்! பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. இவர் அயன், மாற்றான், கோ, அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கி உள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், கே.வி.ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு  சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி” என பதிவிட...
நேர்மையான மனிதர் இறந்துவிட்டார் – கே.வி.ஆனந்த் மறைவு குறித்து தனுஷ் உருக்கம்!

நேர்மையான மனிதர் இறந்துவிட்டார் – கே.வி.ஆனந்த் மறைவு குறித்து தனுஷ் உருக்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
நேர்மையான மனிதர் இறந்துவிட்டார் - கே.வி.ஆனந்த் மறைவு குறித்து தனுஷ் உருக்கம்! பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அநேகன் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “நேர்மையான மனிதர் இறந்துவிட்டார். அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த இனிமையானவர் கே.வி.ஆனந்த். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆத்மா சாந்தியடையட்டு...
அன்பு நண்பரை இழந்துவிட்டேன் – கே.வி.ஆனந்த் மறைவுக்கு இயக்குனர் ஷங்கர் இரங்கல்!

அன்பு நண்பரை இழந்துவிட்டேன் – கே.வி.ஆனந்த் மறைவுக்கு இயக்குனர் ஷங்கர் இரங்கல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
அன்பு நண்பரை இழந்துவிட்டேன் - கே.வி.ஆனந்த் மறைவுக்கு இயக்குனர் ஷங்கர் இரங்கல்! பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. இவர் அயன், மாற்றான், கோ, அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கி உள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இயக்குனரும், கே.வி.ஆனந்துடன் முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களில் பணியாற்றியவருமான ஷங்கர், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “கே.வி.ஆனந்த் மறைந்த செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். என் இதயம் கனக்கிறது. என்னால் இதை ஏற்க முடியவில்லை. அன்பு நண்பரை இழந்துவிட்டேன். கே.வி.ஆனந்த், ஒரு அற்...
இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்!

இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்! பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 2005-ம் ஆண்டு வெளியான கனா கண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான கே.வி.ஆனந்த், தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். இதுதவிர, காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார்....
விஜய் சேதுபதிக்காக ‘விடுதலை’ படத்தில் அதிரடி மாற்றம் செய்த தயாரிப்பாளர்!

விஜய் சேதுபதிக்காக ‘விடுதலை’ படத்தில் அதிரடி மாற்றம் செய்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சேதுபதிக்காக ‘விடுதலை’ படத்தில் அதிரடி மாற்றம் செய்த தயாரிப்பாளர்! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இணைந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் ‘விடுதலை’ படத்தை தமிழில் மட்டுமே வெளியிட திட்டமிட்டிருந்த தயாரிப்பாளர், விஜய் சேதுபதியின் வருகையாலும், அவருக்கு தெலுங்கு, இந்தி போன்ற திரையுலகில் இருக்கும் மார்க்கெட் காரணமாக பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார். அதன்படி ...