சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

CINI NEWS

அதை யாரும் நம்பாதீங்க… சிபிராஜ் அறிவிப்பு!

அதை யாரும் நம்பாதீங்க… சிபிராஜ் அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அதை யாரும் நம்பாதீங்க... சிபிராஜ் அறிவிப்பு! சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என்ற அறிவிப்புடன் பெண்களைக் குறிவைத்துப் பரப்பப்படும் விளம்பரங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பிரபலமான நடிகர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சில மர்ம நபர்கள் இத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், மர்ம கும்பல் தற்போது நடிகர் சிபிராஜின் பெயரைப் பயன்படுத்தி பெண்களைக் குறிவைத்துள்ளது. சிபிராஜ் படத்தில் நடிக்க ஆட்கள் தேவை எனக் குறிப்பிட்டுள்ள அந்த கும்பல், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப வயது வித்தியாசத்தையும் குறிப்பிட்டுள்ளது. இந்த விளம்பரம் சிபிராஜின் கவனத்திற்கு வர, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது என் கவனத்திற்கு வந்தது. இ...
இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட்!

இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட்! ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய்சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாகி, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 என்று பல படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன. விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது லாபம் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் ரம்ஜான் பண்டிகை நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி எடுத்த போட்டோ ஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. Man of Fusion என்ற தலைப்பில் பிரபல புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன் இந்த புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்....
‘தளபதி 65’ படக்குழுவின் அடுத்த பிளான்!

‘தளபதி 65’ படக்குழுவின் அடுத்த பிளான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘தளபதி 65’ படக்குழுவின் அடுத்த பிளான்! விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த 2 வாரங்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் அங்கு முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னை திரும்ப உள்ளனர். இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பியதும், சில நாட்கள் ஓய்வுக்கு பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளார்களாம். முதலில் சென்னையில் விஜய் - பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சியை படமாக்க உள்ளார்களாம். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒள...
உடல்நிலை சரியானதும் ‘அந்தகன்’ படப்பிடிப்பில் இணைந்த கார்த்திக்!

உடல்நிலை சரியானதும் ‘அந்தகன்’ படப்பிடிப்பில் இணைந்த கார்த்திக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
உடல்நிலை சரியானதும் ‘அந்தகன்’ படப்பிடிப்பில் இணைந்த கார்த்திக்! பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். மேலும் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகிபாபு, சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்திக் அந்தகன் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். உடல்நலப் பிரச்சனை காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், நலமாகி வந்ததும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்....
அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘அண்ணாத்த’ படக்குழு!

அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘அண்ணாத்த’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘அண்ணாத்த’ படக்குழு! ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால், ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மட்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார்களாம். தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என்பதால் இவ்வாறு செய்கிறார்களாம். மேலும், இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தினால் தான் உரிய நேரத்தில் படத்தை முடிக்க முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளதாம். அதனால் தற்போது தெலங்கானாவில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், அம்மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்த உள்ளதாக தகவல் வெளிய...
ஒரே ஷாட்டில் படமாகும் ஹன்சிகாவின் புதிய படம்!

ஒரே ஷாட்டில் படமாகும் ஹன்சிகாவின் புதிய படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஒரே ஷாட்டில் படமாகும் ஹன்சிகாவின் புதிய படம்! தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. தற்போது அவர் கைவசம் `மஹா' என்கிற படம் மட்டும் உள்ளது. இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகை ஹன்சிகா அடுத்ததாக தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ‘105 மினிட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு, ஒரே ஷாட்டில் படமாக்கபட உள்ளதாம். திரில்லர் படமாக உருவாகும் இதை ராஜா துஷ்ஷா இயக்குகிறார். ஒரே ஷாட்டில் எடுக்கப்படும், ஒரு கதாப்பாத்திரம் நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்கிற சாதனையை இந்தப் படம் படைக்கவுள்ளது. இதேபோல் தமிழி...
மாநாடு படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் அப்டேட்!

மாநாடு படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் அப்டேட்! வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். இந்நிலையில், மாநாடு படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் முத...
மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி – அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்!

மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி – அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி - அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்! மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் ஹீரோயினாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் உட்பட படக்குழுவினரை பாராட்டினர். வசூல் ரீதியாகவும் இப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. நடிகர் தனுஷ் நடித்த படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக கர்ணன் அமைந்தது. இந்நிலையில், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில், மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்தாண்டு படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தனுஷ் ...
லாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
லாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி லாபம் படம் வருகிற ரம்ஜான் பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி...