திங்கட்கிழமை, மே 13
Shadow

CINI NEWS

‘தமிழ் படம்’ இயக்குனருடன் இணையும் விஜய் ஆண்டனி!

‘தமிழ் படம்’ இயக்குனருடன் இணையும் விஜய் ஆண்டனி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘தமிழ் படம்’ இயக்குனருடன் இணையும் விஜய் ஆண்டனி! திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தற்போது பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி, அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர மேலும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். அதன்படி, தமிழ்படம் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாக உள்ளது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவ...
தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா பாதிப்பு!

தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா பாதிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், தனுஷின் மாரி-2 படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் டொவினோ தாமசும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ‘கள’ என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பில், கலந்துகொண்ட டொவினோ தாமஸ், சண்டைக்காட்சியில் நடிக்கும்போது விபத்தில் சிக்கினார். இதில் அவரது வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பிறகு ஆபரேஷன் செய்து, காயம் குணமாகி தற்போது படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...
மீண்டும் இணையும் மதயானை கூட்டம்!

மீண்டும் இணையும் மதயானை கூட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் இணையும் மதயானை கூட்டம்! விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் கதிர், ஓவியா நடிப்பில் வெளியான படம் `மதயானை கூட்டம்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்குப் பிறகு விக்ரம் சுகுமாறன் `இராவண கோட்டம்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், விக்ரம் சுகுமாறன் அடுத்ததாக மீண்டும் கதிரை வைத்து புதிய படம் இயக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த புதிய படத்தை லிப்ரா புரொடக்‌ஷன் ரவீந்தர் தயாரிக்க இருக்கிறார். விரைவில் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியலை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்....
ஆர்யா படத்தில் நடித்த அரவிந்த் சாமி!

ஆர்யா படத்தில் நடித்த அரவிந்த் சாமி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஆர்யா படத்தில் நடித்த அரவிந்த் சாமி! தமிழில் ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான இவர், சில வருடங்களாக நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். தற்போது அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, ‘கள்ளபார்ட்’, ‘தலைவி’ ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படங்களை நடிகர் அரவிந்த் சாமி தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வந்தார். தற்போது இந்த படத்திற்கு தமிழில் ‘ரெண்டகம்’ என்றும் மலையாளத்தில் ‘ஒட்டு’ என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத...
மகத் காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்!

மகத் காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மகத் காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்! ‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடனும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடனும் சேர்ந்து நடித்தவர் மகத். இவர் சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். இந்நிலையில், மகத் நடிப்பில் உருவாகி வரும் ‘காதல் ConditionsApply’ என்ற படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரையும் நடிகர் சிம்பு வெளியிட்டிருக்கிறார். லிப்ரா புரொடக்‌ஷன் ரவீந்தர் தயாரிக்கும் இந்த படத்தை அரவிந்த் இயக்குகிறார். தற்போது இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு!

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு! அஜித்குமார் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி ஆகிய படங்கள் மூலம் மேலும் பிரபலமானார். விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததன் மூலம் நட்சத்திர இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார். இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு 1947 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இணை தயாரிப்பு ஓம் பிரகாஷ் பட். பொன் குமரன் இந்தப் படத்தை இயக்குகிறார். தற்போது படத்தின் முன்னணி பணிகள் தொடங்கியுள்ளது. விரைவில் இப்படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து முறைப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக...
சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்! சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கிய இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை அடுத்து நவரசா என்ற ஆந்தாலஜியில் கவுதம்மேனன் கதையில் நடித்துள்ளார் சூர்யா. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதனிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஜல்லிக்கட்டு தொடர்பான படம் என்பதாலும் சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதாலும் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. பாண்டிராஜ் படத்தை முடித்த பின்னர் வெற்றிமாறன் படத்தில் சூர்யா இணைவார் என தெரிகிறது. இந்ந...
வீடு தேடி சென்று இயக்குனரை பாராட்டிய விக்ரம்!

வீடு தேடி சென்று இயக்குனரை பாராட்டிய விக்ரம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
வீடு தேடி சென்று இயக்குனரை பாராட்டிய விக்ரம்! மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விக்ரம், இயக்குனர் மாரி செல்வராஜின் வீட்டுக்கு சென்று அவரை பாராட்டி இருக்கிறார். இயக்குனர் மாரி செல்வராஜ், கர்ணன் படத்தை தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாக இருப்பதாக கூறப்படும் இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன் மூலம் தயாரிக்கிறார்....
பகத் பாசில் படங்களுக்கு தடை!

பகத் பாசில் படங்களுக்கு தடை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பகத் பாசில் படங்களுக்கு தடை! கொரோனா பரவல் திரையுலகில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கில் பல மாதங்கள் மூடப்பட்ட தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால் பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்து உள்ளன. இதனால் திரையரங்குகளில் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வந்துள்ளன. மலையாளத்தில் பகத் பாசில் நடித்துள்ள சி யூ சூன், இருள், ஜோஜி ஆகிய படங்கள் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளன. தியேட்டர்களை திறந்த பிறகும் பகத் பாசில் படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாவதால் அவரது படங்களை இனிமேல் திரைய...
பாலிவுட் நடிகரை இயக்கும் சங்கர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பாலிவுட் நடிகரை இயக்கும் சங்கர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாலிவுட் நடிகரை இயக்கும் சங்கர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் சங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் சங்கர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘அந்நியன்’ படத்தின் தழுவலாக உருவாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு 2022 ஆண்டு தொடங்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது....