ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Uncategorized

பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில், அமேசான் ஒரிஜினல் திரைப்படம் “ஓ மை டாக்” !

பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில், அமேசான் ஒரிஜினல் திரைப்படம் “ஓ மை டாக்” !

Uncategorized
  பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில், அமேசான் ஒரிஜினல் திரைப்படம் “ஓ மை டாக்” ! அமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் உலகளவில் ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெய்னராக, 'ஓ மை டாக்', படத்தை வெளியிட்டுள்ளது. ஒரு சிறு நாய்க்குட்டி சிம்பா மற்றும் ஒரு குட்டிப்பையன் அர்ஜுன் (ஆர்ணவ் விஜய்) பற்றிய அழகான கதையை சொல்லும் இப்படம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளது. ஒரு திரைக்குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை சேர்ந்தவர்களில், பழம்பெரும் நடிகர் விஜய் குமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகியோர் இப்படத்தில் முதல்முறையாக இணைந்து நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்கள். இப்படம் பார்வையாளர்களிடம் மட்டுமில்லாமல், திரைத்துறை பிரபலங்களிடமிருந்தும் பெரும் அன்பைப் பெற்று வருகிறது, அவர்கள் இணையமெங்கும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் படத்தைப் பற்றிய ...
“அந்த நாள்” படத்தை இவங்க கண்டிப்பாக பார்க்க வேண்டாம் என்கிறார் ஏவிஎம் குடும்ப மாப்பிள்ளை!

“அந்த நாள்” படத்தை இவங்க கண்டிப்பாக பார்க்க வேண்டாம் என்கிறார் ஏவிஎம் குடும்ப மாப்பிள்ளை!

Uncategorized
  ஏவிஎம் சரவணனின் பேத்தியான அபர்ணாவை திருமணம் செய்துகொண்டவர், ஆர்யன் ஷியாம். தற்போது அவர், ‘அந்த நாள்’ என்ற படத்தை தயாரித்து நடித்து உள்ளார். ‘மிஷ்கின் இயக்கத்தில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. (தனிச்செய்தியாக இது பதியப்பட்டு உள்ளது.) இந்த நிலையில், மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தைவிட, பத்து மடங்கு சிறந்த படத்தை உருவாக்க வேண்டும் என சபதம் எடுத்தேன். நானே கதை திரைக்கதை அமைத்தேன். தயாரித்து நடிக்கவும் செய்தேன். எடுக்கப்பட்ட படம் இது. படப் பணிகள் முழுதும் முடிந்து, கடந்த பிப்ரவரியில் சென்சார் போர்டுக்கு அனுப்பிவைத்தோம். நரபலி, பில்லி சூனியம் மற்றும் அதிரடி காட்சிகள் இருப்பதால், சான்றிதழே கொடுக்க முடியாது என்றனர். அதாவது படத்தை திரையிடவே முடியாத நிலை. பிறகு ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பினோம். நடிகை கவுதமி தலைமையிலான அந்த கமிட்டி படத்தை பார்த்த...
ஆண்ட்ரியாவின் “நோ எண்ட்ரி” புதுரகமாம்!

ஆண்ட்ரியாவின் “நோ எண்ட்ரி” புதுரகமாம்!

Uncategorized
  நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், “நோ எண்ட்ரி” ஒரு புது அனுபவத்திற்கு தயாராகுங்கள் ! இயக்குநர் அழகு கார்த்திக் இயக்கத்தில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடிக்க, புதுமையான திரில்லராக, இந்தியாவில் முதன்முதலாக, முழுக்க முழுக்க சிரபுஞ்சியில் படமாக்கப்பட்ட படம் “நோ எண்ட்ரி”. சுற்றுலாவிற்காக மேகாலயாவின் சிரபுஞ்சி செல்லும் ஒரு ஜோடி அங்கு தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது மனிதர்களை வேட்டையாடும் நாய்க்கூட்டத்திடம் மாட்டிக்கொள்ளும் அந்த ஜோடி அங்கிருந்து எப்படி தப்பிகிறது, என்பதை பரபர திரைக்கதையில் திரில் பயணமாக சொல்லும் படம் தான் “நோ எண்ட்ரி”. மேகலயாவில் உள்ள சிரபுஞ்சி எனும் சுற்றுலா தளம் இந்தியாவின் சிறப்புமிகு இடங்களில் ஒன்று அதன் காடுகளையும், மலைகளையும், மலைகளுக்கு நடுவே புதைந்து கிடக்கும் குகைகளையும் இந்த படமெங்கும் நீங்கள் பார்க்கலாம். காட்டுக்கு நடுவே கட்டப்பட்ட மூங...

கமல் படத்தை கைப்பற்றிய உதயநிதி!

Uncategorized
  உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்”படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ் உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் "விக்ரம்". பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கமல்ஹாசன், R. மகேந்திரன் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் 3 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது விக்ரம் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. தமிழ் திரையுலகின் பெருமைமிகு திரைப்படமாக உருவாகும் விக்ரம் படத்துடன் கைக்கோர்ப்பதில் மகிழ்ச்சி என ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  ...
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஜெ பேபி

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஜெ பேபி

Uncategorized
  இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஊர்வசி, தினேஷ் , மாறன் நடிக்கும் ' ஜெ. பேபி ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பா.இரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்', 'குதிரைவால்' படங்களை அடுத்து, ஐந்தாவது தயாரிப்பாக இப்படம் வெளிவர உள்ளது. சுரேஷ் மாரி இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு, மற்றும் பா.இரஞ்சித் இருவரோடும் பணியாற்றியவர். நடிகர் தினேஷ் , மாறன் , ஊர்வசி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் நகைச்சுவையோடு கூடிய உணர்வுப்பூர்வமான குடும்பக்கதையாக உருவாகியிருக்கிறது. விரைவில் இப்படம் தியேட்டரில் வெளியாகவிருக்கிறது. நீலம் புரொடக்சன்ஸ் , லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்....

சிம்பு வழக்கில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நீதிமன்றம் லட்ச ரூபாய் அபராதம்!

Uncategorized
    நடிகர் சிம்பு நடிப்பில், 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படம் போன 2017ம் வருசம் ஜூன் 23-ல் வெளியாச்சு. இதில் நடிப்பதற்காக தனக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசிய தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், படம் தோல்வியடைந்ததைக் காரணம் காட்டி வெறும் 1 கோடியே 51 லட்ச ரூபாய் மட்டுமே தந்ததா சிம்பு தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிச்சார். ஆனா பின்னாளில் பெரும் விவகாரமாகிப் போன இந்த பிரச்னை தொடர்பாக, சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். அதில், சிம்பு ஒழுங்காக ஷூட்டிங் வருவதே இல்லை, வந்தாலும் ஒத்துழைப்பதில்லை என்று சொல்லி இருந்தார். இதனால் தன்னைப் பற்றி அவதூறு செய்தி பரப்பியதாக கூறி 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மைக்கேல் ராயப்பன் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் சிம்பு. இந்த வழக்கில், தயாரிப்பாள...
Uncategorized
  வன்னியர்கள் நிதியில் உருவான அறக்கட்டளைக்கும் வன்னியர்களுக்கும் சம்மந்தமில்லையாம்! இராமதாஸ் சார்பில் அரசுக்கு ரகசிய கடிதம் அனுப்பிய பாமக தலைவர் ஜி.கே.மணி.  அம்பலப்படுத்திய சி.என்.இராமமூர்த்தி திண்டிவனத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வன்னியர்களுக்காக கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு நிதி உதவி கேட்டு டாக்டர் இராமதாஸ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அந்த அறிக்கையை பார்த்து உலகம் முழுதும் உள்ள பல நூற்றுக்கணக்கான வன்னியர்கள் ஏராளமான நிதி உதவி அளித்தார்கள். பணம், பொருள் அனுப்ப முடியாதவர்கள் தங்கள் உடல் உழைப்பை வழங்கினார்கள். உலகம் முழுவதும் உள்ள அனைத்து வன்னியர்களுக்கும் இந்த அறக்கட்டளை சொந்தமானதாக இருக்கும் என்றெல்லாம் டாக்டர் இராமதாஸ் கூறியிருந்தார். அதே நேரம் வச படைத்த வன்னிய முன்னோர்கள் பலரும் இந்த இனத்தின் மேம்பாட்டிற்காக பல லட்சம் மதிப்பிலான நிலங்களை, கல்வ...
தர்க்கம் செய்வதற்கு இது நேரமல்ல, நீட் தேர்வை ரத்து செய்வதே உடனடி தேவை- முதல்வர் ஸ்டாலின்

தர்க்கம் செய்வதற்கு இது நேரமல்ல, நீட் தேர்வை ரத்து செய்வதே உடனடி தேவை- முதல்வர் ஸ்டாலின்

Uncategorized
  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிளஸ் 2 தேர்வில் 97 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் வேறுவழியின்றி, தனது மருத்துவக் கனவை நனவாக்கிட உக்ரைன் நாட்டிற்குச் சென்று படித்த கர்நாடக மாநிலத்து மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கின்றது உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமலும்- தங்களது மருத்துவக் கனவு என்ன ஆகுமோ என்ற கவலையிலும், பெரும் இன்னல்களை சந்தித்து வரும் மாணவர்கள் குறித்து ஒன்றிய அரசு தெரிவித்து வரும் கருத்துகள்- ஒன்றிய அமைச்சர்களின் பேட்டிகள்- ஒன்றிய அரசுக்கு ஆதரவளிக்கிறோம் என சமூக வலைதளங்களில் போடப்படும் பதிவுகள் எல்லாம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்தப் போக்கினை உடனடியாகக் கைவிட்டு, உக்ரைன் - ரஷ்யப் போரால்...

திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் அளித்துள்ள மிகப்பெரிய வெற்றி முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் சான்று – சி.என்.இராமமூர்த்தி பாராட்டு

Uncategorized
திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் அளித்துள்ள மிகப்பெரிய வெற்றி முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் சான்று - சி.என்.இராமமூர்த்தி பாராட்டு நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் அளித்துள்ள மிகப்பெரிய வெற்றி முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் சான்று என அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் நாம் ஆதரித்த திமுக கூட்டணிக்கு தமிழகம் முழுதும் மக்கள் பெருவாரியாக ஆதரவு கொடுத்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்கியுள்ள வாக்காளப் பொதுமக்களுக்கும் திமுக கூட்டணிக் கட்சிகளைச் சா...
சூடு பிடிக்கும் இயக்குனர் சங்க தேர்தல் பரபரப்பு!

சூடு பிடிக்கும் இயக்குனர் சங்க தேர்தல் பரபரப்பு!

Uncategorized
  *இயக்குநர் சங்க தேர்தல் K.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி வேட்பாளர்கள் அறிமுக விழா!* 2022 - 2024 ஆண்டுக்கான இயக்குநர் சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆசியுடன் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் 30 பேர் குழு பங்கு கொள்கிறது. இவர்களின் அறிமுக விழா இன்று பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. *இவ்விழாவினில் வரவேற்புரை அளித்த மங்கை அரிராஜன் பேசியதாவது…* இமயம் அணி என்றாலே அனைவருக்கும் தெரியும், இது இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் ஆசி பெற்ற அணி. தலைவர் பாக்யராஜ் தலைமையிலான அணி. இது கண்டிப்பாக வெற்றி பெறும். இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் அனைவரையும் இயக்குநர் R.சுந்தர்ராஜன் அவர்கள் பத்திரிகை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தார். இமயம் அணி சார்பில் K.பாக்யராஜ் - தலைவர் ரா. பார்த்திபன் - செயலாளர் வெங்கட்...