செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: M.k Stalin

கவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரினார்!

கவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரினார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரினார்! தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. கூட்டணி கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து தி.மு.க.வுக்கு 133 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. புதிய ஆட்சியை ஏற்படுத்த முறைப்படி சட்டசபை தி.மு.க. தலைவரை தேர்வு செய்ய தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் கூட்டத்தை பொதுச் செயலாளர் துரைமுருகன் கூட்டினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை 6...
பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்கள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்கள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்கள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத்துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன. கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப்பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்....
ஜெயலலிதாவுக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் – ஸ்டாலினை வாழ்த்திய நடிகர் இவர்தான்!

ஜெயலலிதாவுக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் – ஸ்டாலினை வாழ்த்திய நடிகர் இவர்தான்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஜெயலலிதாவுக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் - ஸ்டாலினை வாழ்த்திய பிரபல நடிகர்! தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை முதலே மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சித்தார்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: "ஜெயலலிதாவுக்குப் பிறகு நம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர். மகத்தான வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். எங்கள் அனைவரின் நலனுக்கு நீங்கள் நல்ல ஆட்சியைக் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். எதிர்பார்ப்புகளோடும்...
சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடிய தி.மு.க. கூட்டணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து!

சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடிய தி.மு.க. கூட்டணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடிய தி.மு.க. கூட்டணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து! தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. இறுதியில் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதனைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்க உள்ள தி.மு.க.விற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ சமூக நீதி, கல்வி, சுகாதா...
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க முடியாது – அட்டர்னி ஜெனரல் 

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க முடியாது – அட்டர்னி ஜெனரல் 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க முடியாது - அட்டர்னி ஜெனரல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த 23-ந் தேதி பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘பல்வேறு மாநிலங்களில் பெரும்பான்மை பலம் பெற்ற ஆட்சியையும் பா.ஜ.க. கவிழ்த்துள்ளது. மத்திய அரசு ஜனநாயக ரீதியில் இயங்கவில்லை. நாடாளுமன்றத்தில் பலம் பொருந்தியதாக பா.ஜ.க உள்ளது. சி.பி.ஐ., வருமான வரித்துறை, தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டையும் கூட மத்திய அரசு பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது’ என குற்றம் சாட்டினார். இதில் மக்களை அச்சுறுத்த சுப்ரீம் கோர்ட்டை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என ஸ்டாலின் தெரிவித்திருப்பது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல் எனவும், அதன் சுதந்திரத்தன்மை அதிகாரத...
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை!

தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை! தமிழக சட்டசபைக்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், களத்தில் நிற்கின்றன. இதுதவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவையும் நிற்பதால் தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், கி‌ஷன்ரெட்டி மற்றும் உத்தரப...
மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்- மு.க.ஸ்டாலின்!

மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்- மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்- மு.க.ஸ்டாலின்! அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி. சோதனை நடத்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பிரசாரத்தில் அவர் கூறியதாவது: * மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். * ஐடி.ரெய்டு மூலம் வீட்டுக்குள் திமுகவினரை முடக்கி வைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. * ரெய்டு போன்ற சலசலப்புக்கு எல்லாம் திமுக அஞ்சாது. அதிமுகவை மிரட்டுவது போல் திமுகவை மிரட்ட முடியாது. * மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். * ஐ.டி. ரெய்டு மூலம் வீட்டுக்குள் திமுகவினரை முடக்கி வைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்....
மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை! தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரையில் உள்ள மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வரிமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 2 அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திமுகவின் தேர்தல் பிரசாரத்தை சபரீசன் கவனித்து...
திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்வி கடன் ரத்து- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்வி கடன் ரத்து- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics
விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட காணையில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மனுக்கள் மூலம் மு.க.ஸ்டாலினிடம் குறைகளை தெரிவித்தனர்   அதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளனர். நான் முதல்-அமைச்சராக பதவியேற்று 100 நாட்களுக்குள் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் முதல்-அமைச்சர் அலுவலகத்துக்கு வந்து என்னை நேரில் சந்திக்கலாம். தி.மு.க. ஆட்சியில்தான் முதன்முறையாக முன்னாள் முதல்வர் கருணாநிதி திருமண உதவி திட்டத்தை கொண்டுவந்தார். இதனை இந்தியா முழுவதும் மக்கள் பாராட்டினார்கள். தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் மாணவர்களின் கல்வி கடன் உடனடியாக ரத்து செய்யப்படும். ...