சனிக்கிழமை, செப்டம்பர் 12
Shadow

Tag: Ukraine Russia Conflict

கீவில் உள்ள ராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு – உக்ரைன் ராணுவம் தகவல்!

கீவில் உள்ள ராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு – உக்ரைன் ராணுவம் தகவல்!

HOME SLIDER, NEWS, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கீவ் நகரில் உள்ள ராணுவ தளத்தைக் குறிவைத்து ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது. கீவ்வில் இருந்து மேற்கே 8 மைல் தொலைவில் கடும் சண்டை நடந்து வருகிறது என உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது....
உக்ரைன் போர் – இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?

உக்ரைன் போர் – இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?

HOME SLIDER, NEWS, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
2 நாடுகளுக்கு இடையே நடக்கிற போர் மூன்றாவதாக வேறு ஒரு நாட்டை பாதிக்குமா? தற்போதுள்ள உலகமய பொருளாதாரத்தில், நிச்சயமாக எல்லா நாடுகளுமே ஏதோ ஒருவகையில் பாதிக்கப்படும். அப்படியானால், உக்ரைன் போர் இந்தியாவுக்கு என்ன விதமான பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்?. உக்ரைன் போரின் விளைவாக நேரடி, மறைமுக, செயற்கை பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டி வரும். எப்போதுமே பதற்றமான சூழல் உருவாகிறது என்றால், அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளச் சிலர் முனையத்தான் செய்வார்கள். இதன் காரணமாக செயற்கைப் பற்றாக்குறை அல்லது விலையேற்றம் ஏற்படும். குறிப்பாக, யூகத்தின் அடிப்படையில் நடைபெறும் வணிகத்தில் உடனடியாக இதன் பாதிப்புகளை அறிய முடியும். இதனால்தான், போர் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் தேசியப் பங்குச் சந்தையில் கடுமையான மாற்றம் இருந்தது. இதேபோன்று, அத்தியாவசியப் பொருட்களுக்கும் செயற்கையான...
உக்ரைனில் 1,500 போர் நிறுத்த மீறல்கள் – ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு தகவல்!

உக்ரைனில் 1,500 போர் நிறுத்த மீறல்கள் – ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு தகவல்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைன் பகுதியில் நேற்று  ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 1,500 போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நடந்ததாக ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் டொனெட்ஸ்கில் பகுதியில் 591 மீறல்களும், லுகான்ஸ்கில் 975 மீறல்களும் பதிவாகி உள்ளன. இது கடந்த எட்டு ஆண்டுகாலமாக தொடரும் இரு நாடுகளுக்கு இடையேயான மோதலில் இது அதிகபட்சமாக கருதப்படுகிறது. உக்ரைனின் உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்ற பகுதி அருகே சில நூறு மீட்டர் தூரத்தில் மோட்டார் குண்டுகள் விழுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது....
உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷியா அடுத்த வாரம் தொடங்கும் – அமெரிக்க அதிபர் தகவல்!

உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷியா அடுத்த வாரம் தொடங்கும் – அமெரிக்க அதிபர் தகவல்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷியாவை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும் போது, ‘உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் படையெடுப்பை ரஷியா அடுத்த வாரம் தொடங்கும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைன் மீது படையெடுக்க ரஷிய அதிபர் முடிவு செய்துவிட்டார் என்று ஜோபைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஜோபைடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- ரஷிய படைகள் உக்ரைனை வரும் நாட்களில் தாக்க திட்டமிட்டுள்ளன என்று நம்புவதற்கு எங்களுக்கு காரணங்கள் உள்ளது. உக்ரைன் மீது படையெடுக்க ரஷிய அதிபர் புதின் முடிவு செய்துவிட்டார். அமெரிக்க உளவுத்துறையின் கணிப்புபடி இந்த தாக்குதலில் கீவ் நகரம் குறி வைக்கப்படும். ரஷிய படை வீரர்கள் சுமார் 1...