வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: CM MK Stalin

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம்- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம்- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம்- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! தமிழகத்தில் கொரோனா வைரஸ்பாதிப்பால் நடுத்தர வயதை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். கொரோனா முதல் அலையை விட 2-வது அலையில் ஏற்பட்ட இதுபோன்ற உயிரிழப்புகளால் பல குடும்பங்களில் பெற்றோர்களை இழந்து குழந்தைகள் தவித்து வருகிறார்கள். இதுபோன்ற பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு தரப்பிலும் முன் வைக்கப்பட்டது. இந்த நிலையில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலன் கருதி அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29-ந்தேதி இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டார். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம், வைப்பு தொகை நிலுவையில் வைக்கப்படும் என்று தெரி...
டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்!

டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்! தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக   மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். நாளை மாலை சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின்னர் நாளை மறுநாள் (17-ந் தேதி) முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில்   மு.க.ஸ்டாலின்  பங்கேற்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் அவர் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை மறுநாள் காலை டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்  சந்தித்து பேசுகிறார். இந்த சந்...
கொரோனா கட்டுப்பாடுகளை மீறாதீர்கள்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

கொரோனா கட்டுப்பாடுகளை மீறாதீர்கள்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா கட்டுப்பாடுகளை மீறாதீர்கள்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை! தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் பேசி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது. தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் நலன் காக்கும் இந்த அரசு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா என்ற பெருந்தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அதிகபட்சமாக ஒருநாளைக்கு தொற்றால் பாதிக்கப்படுகிற வர்கள் 36 ஆயிரமாக இருந்தனர். இது 50ஆயிரமாக உயரும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துகொண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக விரைவாக குறைந்து கொண்டே வருகிறது. மருத்துவம...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் ஆய்வு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் ஆய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் ஆய்வு! திருச்சி மாவட்டம் கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கல்லணையில் ஆய்வு செய்தார்....
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா?- மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை!

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா?- மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா?- மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை! தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கொரோனா வைரஸ்  2-வது அலை பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. கடந்த மாதம் 2-வது வாரத்திற்கு மேல் பாதிப்பு உச்சத்தை தொட்டது. 21-ந் தேதி அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 36 ஆயிரத்து 184ஆக இருந்தது. மேலும் பலி எண்ணிக்கையும் 467ஆக உயர்ந்தது. இதனால் தமிழ்நாட்டில் 24-ந்தேதி முதல் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பாதிப்பு 30 ஆயிரத்துக்கு மேல் இருந்ததால் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு தொற்று தொடர்ந்து சரிந்து வந்ததால் கடந்த 7-ந்தேதி முதல் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. க...
பொதுமக்கள் முதலமைச்சரிடம் புகார் அளிக்க  புதிதாக இணையதளம் !

பொதுமக்கள் முதலமைச்சரிடம் புகார் அளிக்க புதிதாக இணையதளம் !

HOME SLIDER, NEWS, செய்திகள்
பொதுமக்கள் முதலமைச்சரிடம் புகார் அளிக்க புதிதாக இணையதளம் ! முதல்வரின் தேர்தல் பிரசாரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இத்துறையில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. http://cmcell.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம். புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்....
தமிழக சட்டசபை விரைவில் கூடுகிறது- அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல்!

தமிழக சட்டசபை விரைவில் கூடுகிறது- அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக சட்டசபை விரைவில் கூடுகிறது- அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல்! தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மே 11-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். 2-வது நாள் சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் போட்டியின்றி சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டதால் அன்றைய தினமே சபாநாயகராக அப்பாவு பதவி ஏற்றார். அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், , எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட சட்டமன்ற கட்சி தலைவர்கள் வாழ்த்தி பேசினார்கள். அத்துடன் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. முந்தைய அ.தி.மு.க. அரசு இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி தாக்கல் செய்தது. புதிதாக ஆட்சி அமைத்துள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு இந்த கூட்டத்தொடரில்...
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகிற 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கால் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்....
கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம்-மளிகை பொருட்கள் தொகுப்பு: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம்-மளிகை பொருட்கள் தொகுப்பு: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம்-மளிகை பொருட்கள் தொகுப்பு: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்! முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின்   தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக கூறி இருந்தார். அதில் கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும். அதன்படி  மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக மே 7-ந்தேதி பதவி ஏற்றதும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டார். இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டார். அதன்படி கடந்த மாதம் ரே‌ஷன் கடைகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ரூ.2 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்பட்டது. 2-வது கட்டமாக கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான இன்று (வியாழக்கிழமை) சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர்...
முழு ஊரடங்குக்கு விரைவில் முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

முழு ஊரடங்குக்கு விரைவில் முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முழு ஊரடங்குக்கு விரைவில் முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடியோவில் பேசி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, அனைவருக்கும் வணக்கம். எல்லாரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து தான் மற்றொருவருக்குப் பரவுகிறது. அதனால் தொற்று தங்கள் மீது பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். அதே போல் நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலைத் தடுத்துவிட முடியும். கடந்த 24-ந்தேதி முதல் 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 24-ந்தேதி முதல் சென்...