சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

HOME SLIDER

மூன் பிக்சர்ஸ் பெருமையுடன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தப்பாட்டம்’..!

மூன் பிக்சர்ஸ் பெருமையுடன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தப்பாட்டம்’..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
தப்பாட்டக் கலைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் கதாநாயகனாக துரை சுதாகரும், கதாநாயகியாக டோனாவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கோவை ஜெயக்குமார், பேனா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இது குறித்து பேசிய டைரக்டர் முஜிபூர் ரஹ்மான், “கணவன், மனைவி இடையே உள்ள அன்பையும், காதலையும் சொல்வதோடு, செய்யாத தவறுக்கு பலி ஆடாக சிக்கிக்கொள்ளும் நாயகியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை இப்படத்தில் யதார்த்தமாக சொல்லியிருக்கிறோம்.” என்றார். இப்படத்திற்கு இசை - பழநி பாலு, ஒளிப்பதிவு - ராஜன், பாடலாசிரியர் - விக்டர் தாஸ், கார்த்திக் & பாலு, சண்டைப்பயிற்சி - ஆக்சன் பிரகாஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - முஜிபூர் ரஹ்மான், தயாரிப்பு - ஆதம் பாவா விரைவில் இப்படம் திரைக்கு வெளிவரவிருக்கிறது. முன்னதாக இப்படம் வெளியாகி கிடைக்கும் மொத்த வசூலையும் தமிழக விவசாயிகளின் பொற்பாதங்...
அமைச்சர் வாங்கிய லஞ்சம்..!  சினிமா விநியோகஸ்தர் சிங்காரவேலன் பகீர் குற்றச்சாட்டு..!

அமைச்சர் வாங்கிய லஞ்சம்..!  சினிமா விநியோகஸ்தர் சிங்காரவேலன் பகீர் குற்றச்சாட்டு..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
அமைச்சர் வாங்கிய லஞ்சம்..! சினிமா விநியோகஸ்தர் சிங்காரவேலன் பகீர் குற்றச்சாட்டு கேளிக்கை வரி ரத்து செய்ய வேண்டி தமிழகத்தில் தியேட்டர் ஸ்டிரைக் நடந்து வருகிறது. சுமார் ஆயிரம் தியேட்டர்கள் தமிழகத்தில் மூடப்பட்டு உள்ளன. இது குறித்து தமிழக அரசுக்கு சினிமா துறை தொடர்பாக பல வேண்டுகோள் விடுத்தும் பலன் ஏதும் இல்லாத நிலை. தொடர்ந்து 3ம் நாளாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சினிமா தயாரிப்பாளர், விநியோகஸ்தர் சிங்காரவேலன் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசும்போது தான் தயாரித்த அட்ரா மச்சான் விசுலு படத்துக்கு துறை அமைச்சர் 5 லட்சம் லஞ்சம் கேட்டார். கொடுத்த பிறகு தான் வரிவிலக்கு சான்று அளிக்கப்பட்டது. ஒரு ஆண்டில் அந்த துறை அமைச்சர் 30 கோடிக்கு மேல் சினிமா தயாரிப்பவர்களிடம் லஞ்சம் பெறுகிறார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது அரசு வட்டாரத...
ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்..!

ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் கணவர் அஸ்வின் ராம்குமார் இருவரும் பரஷ்பரம்  விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவு. பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, இவருக்கு சென்னை சேர்ந்த் தொழில் அதிபர்  அஸ்வின் ராம்குமார் இருவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு  பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம்  நடைபெற்றது.  இவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு வேத் என்ற ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பின்னர் சினிமா படம் தயாரிப்பில் சௌந்தர்யா ஈடுபட்டார். அவர் தயாரிப்பில் கோவா என்ற திரைப்படம் வெளிவந்தது. இதற்கிடையே, அஸ்வின் -  சௌந்தர்யா தம்பதியிடையே முதலில் திருமண உறவில் கருத்து வேறுபாடுகள் எற்பட்டது. இதனை அடுத்து சின்ன, சின்ன சண்டைகள் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.  அதைச் சரி செய்ய ரஜினி குடும்பத்தின் நலம் விரும்பிகள் அவர்களுக்கு அறிவுரை கூறி ...
காமெடியன் பேரன் வில்லன் ஆகும் “நான் யாரென்று நீ சொல்”

காமெடியன் பேரன் வில்லன் ஆகும் “நான் யாரென்று நீ சொல்”

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாகP.மணிமேகலை தயாரிக்கும் படத்திற்கு " நான் யாரென்று நீ சொல்" என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கீர்த்திதரன் கதானாயகனாக நடிக்கிறார். கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கஜேஷ். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமானா இவர் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார். அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு பாண்டு கராத்தேராஜா மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள்.எழுதி இயக்கி இருப்பவர்   A.M.பாஸ்கர்.  பிரபல நடிகையான லஷ்மிராயை சினிமாவில் குறுக்கெழுத்து என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இவர் தான். அவரிடம் நான் யாரென்று நீ சொல் படம் பற்றி கேட்டோம்... சோனாவின் மகள் சுதா ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறாள். அதே நிறுவனத்தில் வேலை செய்யும் கஜேஷ் மற்றும் பேக்கரி த...
உறுதிகொள் பட விழாவில் கமலை வம்புக்கிழுத்த மன்சூர்..!

உறுதிகொள் பட விழாவில் கமலை வம்புக்கிழுத்த மன்சூர்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம்  " உறுதி கொள்"  கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா,  அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.   இந்தப்படத்தின் இசை விழாவில் பரபரப்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது...   கமலஹாசன் முன்பு எடுத்த முடிவை இப்போது நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். திரையரங்கில் மட்டும் படத்தை வெளியிடுவதால்GST மற்றும் மாநில வரி செலுத்த வேண்டி இருக்கும் இதையே தயாரிப்பாளர் சங்கமே ஒரு APP.துவங்கி அதன் மூலம் 100 ரூபாய் பெற்றுக்கொண்டு படங்களை வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக இருக்கும் என்று ஆரி பேச. தியேட்டரில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு..அது தான் சினி...
ஜூலை 12ம் தேதி பெட்ரோல் பங்க் ஸ்டிரைக்..!

ஜூலை 12ம் தேதி பெட்ரோல் பங்க் ஸ்டிரைக்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பெட்ரோல் பம்ப்களில் தானியங்கி தொழில்நுட்பத்தை ஏற்படுத்தாத பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை கண்டித்து, ஜூலை, 12ம் தேதி பெட்ரோல் பங்க்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இது குறித்து அகில இந்திய பெட்ரோல் டீலர்கள் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினசரி மாற்றம் செய்யப்படும் என்ற முடிவுக்கு நாங்கள் துவக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். இதில் வெளிப்படைதன்மை இல்லை என்பது எங்களின் எண்ணமாக உள்ளது.மேலும், தானியங்கி தொழில்நுட்ப வசதி, 100 சதவீத பெட்ரோல் பங்க்குகளிலும் பொருத்தப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்தன. அதை இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே, ஜூலை, 5ம் தேதி பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதில்லை என்றும், ஜூலை, 12ம் தேதி நாடு முழுவதும் அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்றும் முடிவு செய்துள்ளோம். ...
ஜிஎஸ்டி பெயரில் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – நிதியமைச்சர் ஜெயக்குமார்

ஜிஎஸ்டி பெயரில் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – நிதியமைச்சர் ஜெயக்குமார்

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜிஎஸ்டி வரி எனக் கூறி கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அபிராமி ராமநாதன் தலைமையிலான திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று நிதி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன், கேளிக்கை வரி தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து நல்ல முடிவை அறிவிப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளதாக கூறினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ’திரையரங்கங்களுக்கான கேளிக்கை வரியை குறைப்பது தொ...
ஜி.எஸ்.டிக்கு எதிராக டி.ஆர். நாளை ஆர்ப்பாட்டம்..!

ஜி.எஸ்.டிக்கு எதிராக டி.ஆர். நாளை ஆர்ப்பாட்டம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜி.எஸ்.டிக்கு எதிராக ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வரும் டி.ஆர், நாளை காலை 10.30 மணிக்கு பிலிம்.சேம்பர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில், “ மத்திய அரசின் ஜி.எஸ்.டியும் 30% கேளிக்கை வரியும் சேர்ந்தால் தமிழ்த்திரையுலகம் முற்றிலும் அழிந்துவிடும். ஆகவே, தமிழ் சினிமாவை இந்த இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்ற சினிமாவை நேசிக்கும், சினிமாவைக் காப்பாற்றத்துடிக்கும் அத்துனை சினிமா கலைஞர்களும்.நாளை  நடைபெறவிருக்கும் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும். சினிமாவை நம்பி வரும் இளைஞர்கள் மற்றும் புதிய திறமைகளுக்கு உத்திரவாதமான சூழ்நிலையை ஏற்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் காப்பாற்றும் பொறுப்புடன் நாளை நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளவேண்டும்..” என்று கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இணையதள உடகவிய...
மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7000 கோடி வங்கி கடன்: சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7000 கோடி வங்கி கடன்: சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

HOME SLIDER, politics, செய்திகள்
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என தமிழக சட்டபையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அவர் கூறியதாவது:- நடப்பாண்டில் ஊரகப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 1. 2015-16ஆம் ஆண்டில், பல்வேறு வகையான சாலைகளை ஒரே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கடந்த 2 வருடங்களில், 8,875 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் 1,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், 2017-18ஆம் ஆண்டில், 800 கோடி ரூ...