சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்: கஜோல்
தனுஷ் நடிப்பில், சவுந்தர்யா ரஜினிகாந்த் டைரக்ஷனில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் இந்தி நடிகை கஜோல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தின் அறிமுக விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் கலந்துகொள்ள சென்னை வந்த நடிகை கஜோல், நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“தமிழில் நான் ‘மின்சார கனவு’ படத்தில் நடித்தேன். இந்த படம் 1997-ம் ஆண்டு வெளியானது. 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில், ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் நடித்துள்ளேன்.
தமிழ் மொழியில் நடிக்க நான் மிகவும் பயந்தேன். ஏனென்றால் எனக்கு மொழி தான் பெரிய பிரச்சினை. ஆனால் இந்த படத்தில் என்னை நடிக்க சொல்லி தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் வற்புறுத்தி கேட்டனர். நான் தயங்கிய ...