எனக்கு எந்த வியாதியும் இல்லை – அமீத்ஷா அறிவிப்பு
எனக்கு எந்த வியாதியும் இல்லை - அமீத்ஷா அறிவிப்பு
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் யாரோ விஷமிகள், அமித்ஷா தனக்கு பயங்கரமான நோய் தாக்கி இருப்பதாக கூறி பிரார்த்தனையில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டதுபோல போலியாக ‘ஸ்கிரீன் ஷாட்’ தயாரித்து அதை மற்றொரு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டனர்
இதுகுறித்து அமித்ஷாவின் கவனத்துக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கடந்த சில நாட்களாக சில நண்பர்கள் எனது உடல்நிலை குறித்து பல சுவாரசியமான வதந்திகளை சமூக ஊடகங்கள் வழியாக பரப்பி உள்ளனர். எனது மரணத்துக்காகவும் பலர் ‘டுவிட்’ செய்து, பிரார்த்தனை செய்துள்ளனர்.
இப்போது நாடு கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து ...




