வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் கிரண்பேடி திடீர் சந்திப்பு… புதுவை காங்கிரஸ் அரசு கலைப்பா..?

 

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் கிரண்பேடி திடீர் சந்திப்பு… புதுவை காங்கிரஸ் அரசு கலைப்பா..?

புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடி டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவையும் சந்தித்து பேசினார்.

புதுச்சேரியில் ஏற்கனவே முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அடிக்கடி அதிகார சர்ச்சை இருந்து கொண்டே வருகிறது.

சமீபத்தில் ஆட்சி அதிகாரத்தில் கிரண்பேடி தேவை இல்லாமல் ஆதீக்கம் செலுத்த கூடாது என கோர்ட் உத்தவிட்டது. அதே நேரம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலே அங்கு நடைபெறாமல் இருக்கிறது.

இத்தனை பரபரப்பு இருக்கும் போது கிரண்பேடி திடீரென டில்லி சென்று பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமீத்ஷாவையும் சந்தித்து பேசியது பாண்டிச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதோடு மோடி அரசு பதவி ஏற்றதும் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியை மட்டும் கிரண்பேடி சந்தித்திருந்தால் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு என்று பரவலாக பேசியிருப்பார்கள்.

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவையும் கிரண்பேடி சந்தித்து பேசியதால் புதுவை காங்கிரஸ் அரசு கலைக்கப்படுமா என்ற பரபரப்பு ஏற்படுகிறது.

545 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன