திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

ஆந்திராவில் படிப்படியாக பூரண மதுவிலக்கு – முதல்வர் ஜெகன் அதிரடி ஆரம்பம்

 

 

ஆந்திராவில் படிப்படியாக பூரண மதுவிலக்கு – முதல்வர் ஜெகன் அதிரடி ஆரம்பம்

ஆந்திராவில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய தேர்தலில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை படுதோல்வி அடையச்செய்து ஜெகன் மோகன் ரெட்டி இமாலய வெற்றி பெற்றார்.

30ம் தேதி ஆந்திர முதல்வராக பதவி ஏற்றார். இன்னும் சில தினங்களில் தனது மந்திரிசபையை விரிவு படுத்த இருக்கிறார்.

இந்த சூழலில் ஆந்திர மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தடேபள்ளியில் உள்ள தனது இல்லத்தில் நிதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அப்போது அவர், மாநிலத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மது குடிக்கும் பழக்கத்தை குறைக்க வகை செய்யும் விதம் புதிய ஆலோசனைகள் சொல்லும் படி அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி.

490 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன