புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: அமைச்சர் விஜயபாஸ்கர்

கமிஷனுக்காக விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்துமே தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

கமிஷனுக்காக விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்துமே தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கமிஷனுக்காக விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்துமே தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை   நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம், எடப்பாடி அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும் தலைவிரித்தாடும் ஊழலை அம்பலப்படுத்தி இருக்கிறது. கமிஷனுக்காக விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்துமே தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்பட்டு - டெண்டர் முறைகேடுகள் தொடர்பான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். அதிலிருந்து அ.தி.மு.க. அமைச்சர்களோ, துணைபோகும் அதிகாரிகளோ தப்ப முடியாது" என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: ...
தமிழகத்தில் வைரஸ் பரவுதலை தடுக்க செயல்படுத்திய மைக்ரோ திட்டத்தால் விரைவில் குறையும் கொரானா – அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

தமிழகத்தில் வைரஸ் பரவுதலை தடுக்க செயல்படுத்திய மைக்ரோ திட்டத்தால் விரைவில் குறையும் கொரானா – அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் வைரஸ் பரவுதலை தடுக்க செயல்படுத்திய மைக்ரோ திட்டத்தால் விரைவில் குறையும் கொரானா - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:- கொரோவை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதல்படி அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக தனி படுக்கை வசதிகள் உருவாக்கி இருப்பதோடு, தனியார் ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். அந்த வகையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் 1500 படுக்கைகள் ஒதுக்குகின்றனர். அதேபோல சவிதா மருத்துவ கல்லூரி, மியாட் மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் 500 படுக்கைகள் ஒதுக்க உள்ளனர். தற்போது பி.சி.ஆர். எனப்படும் கருவி மூலமாக கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. இந்த கருவி...
கொரானா சமூக பரவல் ஆகி 3வது கட்டத்துக்கு போக கூடாது என போராடி வருகிறோம் – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

கொரானா சமூக பரவல் ஆகி 3வது கட்டத்துக்கு போக கூடாது என போராடி வருகிறோம் – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா சமூக பரவல் ஆகி 3வது கட்டத்துக்கு போக கூடாது என போராடி வருகிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி உயிர்க்கொல்லி கொரானா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:- தமிழகம் கொரானா வைரஸ் பாதிப்பில் 2-வது நிலையில் உள்ளது. இந்த 2-வது நிலையுடன் கொரானா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது கொரானா வைரசின் 3-வது கட்டம் என்பது சமூக பரவலாகும். சமூகத்தில் பரவ ஆரம்பித்து விட்டால் கொரானா வைரசை கட்டுப்படுத்துவது கஷ்டமாகும். ஆகையால் தமிழகத்தில் கொரானா வைரஸ் சமூக பரவல் நிலைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் தீவிரமாக போராடி வருகிறோம். கொரானா வைரசை தமிழகத்தில் வேகமாக பரவுவதை தடுப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள...
தனிமைபடுத்தபட்டவர்கள் வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

தனிமைபடுத்தபட்டவர்கள் வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தனிமைபடுத்தபட்டவர்கள் வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை வெளிநாடு சென்று திரும்பியவர்கள் கண்டிப்பாக தனிமையில் இருக்க வேண்டும்... மீறினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை கொரானா பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. தயவு செய்து அரசு சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுங்கள். குறிப்பாக சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவ்ர்கள் தயவு செய்து உங்கள் பயண விவரங்களை தாமாக முன்வந்து சொல்லுங்கள். கண்டிப்பாக வெளிநாடு சென்று திரும்பியவர்கள் கண்டிப்பாக வெளியே செல்லக்கூடாது. ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் அதை அலட்சியம் செய்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். உத்தரவுகளை மீறுகிறவர்களை இனியும் அரசு வேடிக்கை பார்க்காது. நீண்ட காலமாக மருந்து எடுப்பவர்களுக்கு அவர்களுக்கு தேவைபடும் ம...
கொரானா பரவலை தடுக்க அனைத்து வழிகளிலும் அரசு தீவிரம் காட்டுகிறது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரானா பரவலை தடுக்க அனைத்து வழிகளிலும் அரசு தீவிரம் காட்டுகிறது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பரவலை தடுக்க அனைத்து வழிகளிலும் அரசு தீவிரம் காட்டுகிறது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்! அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது; கொரோனா நோய் பாதிப்பு அறிகுறியும் பருவகால புளு காய்ச்சல் தாக்குதல் அறிகுறியும் ஒரே மாதிரி தான் இருக்கின்றன. எனவே இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலும், பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியமாகும். தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. நோயை எதிர்கொள்ள எல்லா நிலையிலும் தயார் நிலையில் இருக்கிறோம். இந்த நோய் ஒருவரிடத்தில் இருந்து ஒருவருக்கு பரவி விடக்கூடாது என்பது மிக முக்கிமானது ஆகும். எனவே அதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். 8 இடங்களில் பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு தனி வார்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ...
மாஸ்க், தெர்மல் ஸ்கேனர் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

மாஸ்க், தெர்மல் ஸ்கேனர் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முக கவசம், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர். அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முக கவசம், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும். தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்....
குட்கா ஊழல் – அமைச்சர் விஜயபாஸ்கர், உதவியாளருக்கு சிபிஐ சம்மன்

குட்கா ஊழல் – அமைச்சர் விஜயபாஸ்கர், உதவியாளருக்கு சிபிஐ சம்மன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. செங்குன்றம் குட்கா குடோனில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையின் எதிரொலியாக அங்கு கைப்பற்றபட்ட டைரியே குட்கா விவகாரத்தின் பின்னணியில் இருந்தவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது அந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. அதன்பின்னர் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி குட்கா வியாபாரி மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  அதன்பின்னர் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம்...