வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

தனிமைபடுத்தபட்டவர்கள் வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

 

 

தனிமைபடுத்தபட்டவர்கள் வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

வெளிநாடு சென்று திரும்பியவர்கள் கண்டிப்பாக தனிமையில் இருக்க வேண்டும்… மீறினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

கொரானா பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. தயவு செய்து அரசு சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுங்கள்.

குறிப்பாக சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவ்ர்கள் தயவு செய்து உங்கள் பயண விவரங்களை தாமாக முன்வந்து சொல்லுங்கள். கண்டிப்பாக வெளிநாடு சென்று திரும்பியவர்கள் கண்டிப்பாக வெளியே செல்லக்கூடாது.
ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் அதை அலட்சியம் செய்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உத்தரவுகளை மீறுகிறவர்களை இனியும் அரசு வேடிக்கை பார்க்காது.

நீண்ட காலமாக மருந்து எடுப்பவர்களுக்கு அவர்களுக்கு தேவைபடும் மருந்துகள் அனைத்தும் இரண்டு மாதங்களுக்கு வழங்க அரசு தயாராக உள்ளது.

தமிழகத்தில் கொரானா பாதிப்படைந்த அனைவருமே வெளிநாட்டு தொடர்புடையவர்கள் என்பதால்தான் வெளிநாடு சென்று வந்தவர்களை தனிமை படுத்தி கொள்ளுங்கள் என்று திரும்ப திரும்ப சொல்கிறோம்.

தமிழகம் முழுதும் 100 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்த பணியில் ஒதுக்கி முதல்வர் அனுமதி வழங்கி இருக்கிறார்.

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், ஊடகதுறையினர் என பலரும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். தயவு செய்து வதந்தியை பரப்ப வேண்டாம்.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

817 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன