வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

சீனாவில் கொரானா தாக்குதலை அடுத்து ஹாண்டா வைரஸ் தாக்கி ஒருவர் பலி – அதிர்ச்சியில் உலக நாடுகள்

 

சீனாவில் கொரானா தாக்குதலை அடுத்து ஹாண்டா வைரஸ் தாக்கம் – அதிர்ச்சியில் உலக நாடுகள்

உலகம் முழுதும் பெரும் அச்சத்தையும் உயிர்பலிகளையும் ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையாக போராடி வரும் நிலையில் அதே சீனாவில் மீண்டும் ஒரு உயிர்க் கொல்லி வைரஸ் ஆக ஹாண்டா என்ற புதியவகை தொற்று நோய்கிருமி தாக்கம் தொடங்கி உள்ளதாம்.

சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

அவரை பரிசோதித்த டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் அவருக்கு ஹாண்டா வைரஸ் தாக்குதல் இருந்தது தெரியவந்துள்ளது.

இவர் பயணம் செய்த பேருந்தில், அவரோடு இருந்த 32 பயணிகளுக்கும் இந்த நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த வைரஸ் எலிகளிடமிருந்து பரவியிருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே கொரானா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுதும் பல லட்சம் மக்கள் பாதிப்படைந்து இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இன்னமும் கொரானா வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கண்டறியப்படாத நிலையில் உலகமே நோய் தொற்று போரில் மீள்வதற்கு போராடி வருகிறது.

இந்த சூழலில் மீண்டும் ஹாண்டா என்ற வைரஸ் தாக்குதல் அதே சீனாவில் கண்டறியப்பட்டு உள்ளதால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

எலிகளை மட்டும் தாக்கும் இந்த வைரஸ் பிற விலங்குகளை தாக்காது. ஆனால், மனிதர்களை தாக்கும் அபாயம் இருப்பதால் சீனாவில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படும். ஆனால், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவாது என்பது மட்டும் ஆறுதலான விஷயம்.

745 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன