வியாழக்கிழமை, மே 16
Shadow

Tag: கொரானா எச்சரிக்கை

மின்னல் வேகத்தில் பரவும் 3-வது அலை: இந்தியாவில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

மின்னல் வேகத்தில் பரவும் 3-வது அலை: இந்தியாவில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மின்னல் வேகத்தில் பரவும் 3-வது அலை: இந்தியாவில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பும் நாள்தோறும் உயர்ந்து வருகிறது. முக்கிய நகரங்களில் தொற்று மின்னல் வேகத்தில் பரவுவது 3-வது அலை தொடங்கி விட்டதை காட்டுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கேற்றார்போல் ஒரு வாரம் முன்பு 6 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு, நாள்தோறும் உயர்ந்து இன்று 58 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 58,097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 37,379 ஆக இருந்தது. நேற்று ஒரேநாளில் சுமார் 56 சதவீதம் பாதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 50 லட்சத்து 18 ஆயிரத்து 358 ஆக அதிகரித்துள்ளது. நேற்று...
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் இ-பாஸ் கட்டாயம் என்கிறார் முதல்வர் பழனிச்சாமி!

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் இ-பாஸ் கட்டாயம் என்கிறார் முதல்வர் பழனிச்சாமி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி பேசியதாவது: கொரானா வைரஸை கட்டுப்படுத்த கடுமையான முயற்சி எடுத்து வருகிறோம். *தமிழகத்தில் கொரானா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம்.* *கொரானாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.* *தமிழகம் முழுவதும் கொரானா சிகிச்சைக்கு 75ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.* *சென்னையில் மக்கள் தொகை அதிகம், குறுகலான தெருக்கள் அதிகம், ஒரே வீட்டில் 7 பேர் வரை உள்ளனர்,* *மக்கள் தொகை அதிகம் என்பதால் சென்னையில் கொரானா தொற்று எளிதாக பரவுகிறது.* *சென்னையில் தற்போது வீடு வீடாக சென்று கொரானா அறிகுறிகள் உள்ளனவா என்று பரிசோதிக்கப்படுகிறது.* *சென்னையில் சுமார் 600 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு காய்ச்சல் உள்ளவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.* *சென்னையில் மட்டும் ...
இந்தியாவில் ஜூலையில் கொரானா தாக்கம் உச்சத்தில் இருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவில் ஜூலையில் கொரானா தாக்கம் உச்சத்தில் இருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    இந்தியாவில் ஜூலையில் கொரானா தாக்கம் உச்சத்தில் இருக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை இந்தியாவில் கொரானாவின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் என்று நிபுணர்கள் முன்பு கணித்து இருந்தனர். ஆனால், வைரஸ் தாக்கம் ஜூலை மாதம்தான் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: இந்தியாவில் கொரானா தாக்கம் அதிகமாக இருப்பதாக தெரிந்தாலும் இந்தியாவின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது, இது குறைவான எண்ணிக்கையாகவே கருதப்படுகிறது. இந்தியா கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் விரைவாக செயல்பட்டதால் தான் தற்போது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது இந்தியாவில் மக்கள் நெருக்கமாக வாழ்வதால் அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது. ஆனாலும், இதன் பரவல் குறைந்து வருகிற...
தமிழகத்தில் கொரானா தொற்று இன்னும் 2ம் கட்டத்தில் தான் உள்ளது – சுகாதார துறை செயலர் தகவல்!

தமிழகத்தில் கொரானா தொற்று இன்னும் 2ம் கட்டத்தில் தான் உள்ளது – சுகாதார துறை செயலர் தகவல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் கொரானா தொற்று இன்னும் 2ம் கட்டத்தில் தான் உள்ளது - சுகாதார துறை செயலர் தகவல்! சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 485 லிருந்து 571 ஆக அதிகரிப்பு. இன்று பாதிப்படைந்த 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள். கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் தான் உள்ளது டெல்லி சென்று வந்த 1246 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் தான் உள்ளன. மகாராஷ்டிராவைவிட தமிழகத்தில் தான் அதிக ரத்த மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என பீலா ராஜேஷ் கூறினார்...
கொரானா எதிரொலி இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்த A.R. ரஹ்மான்!

கொரானா எதிரொலி இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்த A.R. ரஹ்மான்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    கொடூர அரக்கனாக பல லட்சம் மக்களை பாதித்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் உலகம் முழுதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் மெல்ல மெல்ல அதன் தீவிரத்தை அதிகரித்து வருகிறது. இதன் பரவலை தடுக்க நாடு முழுதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். திரைப்பிரபலங்கள் பலரும் கொரானா விழிப்புணர்வு பதிவுகளை வீடியோ வடிவில் வெளியிட்டு வருகிறார்கள். திரைத்துறை முற்றிலும் முடங்கி உள்ளது. இந்த சூழலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மே, ஜூன் மாதங்களில் திட்டமிட்ட தனது வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் “மே, ஜூன் மாதங்களில் வட அமெரிக்காவில் நடைபெற இருந்த தனது இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் அடுத்த வருடத்துக்கு தள்ளிவைத்...
கொரானா பாதிப்பால் அடுத்த 3 மாதங்களுக்கு வங்கிகளில் வாங்கிய கடனை கட்டுவதில் விலக்கு – ஆர்.பி.ஐ அறிவிப்பு

கொரானா பாதிப்பால் அடுத்த 3 மாதங்களுக்கு வங்கிகளில் வாங்கிய கடனை கட்டுவதில் விலக்கு – ஆர்.பி.ஐ அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பாதிப்பால் அடுத்த 3 மாதங்களுக்கு வங்கிகளில் வாங்கிய கடனை கட்டுவதில் விலக்கு - ஆர்.பி.ஐ அறிவிப்பு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் தொடங்கி கூலித் தொழிலாளர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அனைத்து தொழில் துறைகளும் முடங்கி இருக்கின்றன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி சலுகைகளை அளித்து வருகின்றன. மாத தொடக்கம் நெருங்கி வரும் சூழலில் வங்கி கடன் தவணைகள் மக்களை பெரிதும் அச்சப்படுத்தியது. அதோடு வங்கி கடன் தவணையில் ஏதாவது சலுகைகள் அறிவிக்க வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித...
மலேசிய அரண்மனையில் 7 பேருக்கு கொரானா பாதிப்பு… மன்னர், ராணி தனிமைபடுத்தப்பட்டனர்!

மலேசிய அரண்மனையில் 7 பேருக்கு கொரானா பாதிப்பு… மன்னர், ராணி தனிமைபடுத்தப்பட்டனர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரஸ் தாக்கம் என்பது உலகம் முழுதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது. சாமானிய மக்கள் தொடங்கி இங்கிலாந்து இளவரசர் வரை கொரானா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். ஏழை பணக்காரன் என்றில்லாமல் உலக மக்களை ரவுண்டு கட்டி அடிக்கும் கொரானா தாக்குதலில் சிக்கிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இங்கு இப்போது வரை 2,031 பேர் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்குள்ள அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மலேசிய அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் , அரண்மனையைச் சேர்ந்த ஊழியர்கள் 7 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு  கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது, அவர்களுக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என சுக...
உஷார்… இதே வேகத்தில் போனால் மே மாசத்தில் கொரானா தாக்கம் 10 லட்சத்தை தாண்டுமாம்!

உஷார்… இதே வேகத்தில் போனால் மே மாசத்தில் கொரானா தாக்கம் 10 லட்சத்தை தாண்டுமாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உலகம் முழுதும் பெரும் அச்சத்தையும், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை குடித்து வரும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் தற்போது சுமார் 700 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி வரை இந்தியாவில் வைரஸ் பரவலின் வேகம் தொடர்பான விவரங்களை வைத்து சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில், ‘இந்தியாவில் வைரஸ் தொற்றின் வேகம் இப்போது இருக்கும் இதே வேகத்தில் சென்றால், மே மாத இடைப்பகுதிக்குள் இந்தியாவில் 1 முதல் 13 லட்சம் வரையிலான நபர்கள் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு உள்ளது’ என கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுக்க சமூக விலகல் மிகமிக அவசியம் என்றும் எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள்....