வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் இ-பாஸ் கட்டாயம் என்கிறார் முதல்வர் பழனிச்சாமி!

 

 

 

கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி பேசியதாவது:

கொரானா வைரஸை கட்டுப்படுத்த கடுமையான முயற்சி எடுத்து வருகிறோம்.

*தமிழகத்தில் கொரானா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம்.*

*கொரானாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.*

*தமிழகம் முழுவதும் கொரானா சிகிச்சைக்கு 75ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.*

*சென்னையில் மக்கள் தொகை அதிகம், குறுகலான தெருக்கள் அதிகம், ஒரே வீட்டில் 7 பேர் வரை உள்ளனர்,*

*மக்கள் தொகை அதிகம் என்பதால் சென்னையில் கொரானா தொற்று எளிதாக பரவுகிறது.*

*சென்னையில் தற்போது வீடு வீடாக சென்று கொரானா அறிகுறிகள் உள்ளனவா என்று பரிசோதிக்கப்படுகிறது.*

*சென்னையில் சுமார் 600 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு காய்ச்சல் உள்ளவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.*

*சென்னையில் மட்டும் கொரானா சிகிச்சைக்கு 17,500 படுக்கை வசதிகள் உள்ளன.*

*மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிகம் கொரானா பரிசோதனை செய்யப்படுகின்றன.*

*சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகளின் கீழ் கொரானா கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.*

*சென்னையில் கொரானா கட்டுப்பாட்டு பணிகளில் அமைச்சர்கள் 6 பேரும் ஈடுபட்டுள்ளனர்.*

*கொரானா பரவலை தடுக்கவே சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.*

*முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் அரிசி ரேசன்கார்டு தாரர்களுக்கு தலா ரூ.1000 விநியோகிக்கப்படுகிறது.*

*சென்னையில் கொரானா கட்டுப்பாட்டு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடிச் சென்று கொடுக்கப்படுகிறது.*

மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் இ.பாஸ் அவசியம்.

மாவட்ட எல்லைகள் மூடப்படும். கார், பைக் போன்ற தனியார் வாகனஙகளுக்கு அனுமதி இல்லை. என்றார் முதல்வர்.

189 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன