புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

கொரானா எதிரொலி இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்த A.R. ரஹ்மான்!

 

 

கொடூர அரக்கனாக பல லட்சம் மக்களை பாதித்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் உலகம் முழுதும் தீவிரமாக பரவி வருகிறது.

இந்தியாவிலும் அதன் தாக்கம் மெல்ல மெல்ல அதன் தீவிரத்தை அதிகரித்து வருகிறது. இதன் பரவலை தடுக்க நாடு முழுதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

திரைப்பிரபலங்கள் பலரும் கொரானா விழிப்புணர்வு பதிவுகளை வீடியோ வடிவில் வெளியிட்டு வருகிறார்கள்.

திரைத்துறை முற்றிலும் முடங்கி உள்ளது.

இந்த சூழலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மே, ஜூன் மாதங்களில் திட்டமிட்ட தனது வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் “மே, ஜூன் மாதங்களில் வட அமெரிக்காவில் நடைபெற இருந்த தனது இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் அடுத்த வருடத்துக்கு தள்ளிவைத்து இருக்கிறேன். இசையால் அனைவரும் ஒன்றிணைவோம். எனது அடுத்த சுற்றுப்பயண விவரத்தை தகுந்த நேரத்தில் அறிவிப்பேன். அனைவரது உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிகள் ரத்தானது அமெரிக்க ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

879 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன