செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: அரசியல் செய்திகள்

இன்றைய முக்கியச் செய்திகள் 27.01.22

இன்றைய முக்கியச் செய்திகள் 27.01.22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, செய்திகள்
  தமிழ்நாட்டில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பரவல் குறைந்து, தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு மீண்டும் வெளியிட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க மறுப்பு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார் கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தேசிய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பை தொடங்கவிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் மற்றும் பொது நூலக விதிகளில் நவீன காலத்திற்கு ஏற்ப திருத்தங்கள் மேற்கொள்ள உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. 424 கோடி ரூபாய் செலவில் ஈரோடு, மன்...
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம்!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம்! சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன.இன்று பிரசித்திபெற்ற மகரவிளக்கு பூஜை, மகரஜோதிதரிசனமும் நடக்கிறது. இந்த பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று மதியம் ஊர்வலமாக புறப்பட்டது. திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட அய்யப்ப பக்தர்கள் தலைச்சுமையாக எடுத்துச் சென்றனர் பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் இன்று மாலை 6.20 மணிக்கு சபரிமலை சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்படும் திருவாபரணங்களை தந்திரியும், மேல்சாந்த...
சேவல் சண்டை நடத்த அனுமதி கிடைக்குமா?

சேவல் சண்டை நடத்த அனுமதி கிடைக்குமா?

HOME SLIDER, NEWS, செய்திகள்
சேவல் சண்டை நடத்த அனுமதி கிடைக்குமா? பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய வடமலைபாளையம் கிராமத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிபந்தனைகளுடன் பரிசீலிக்க மாவட்ட காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஜனவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஈரோடு மாவட்டம், பெரியவடமலைபாளையம், ஜம்பை கிராமத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கும்படி, பவானி டி.எஸ்.பி.க்கும், காவல் ஆய்வாளருக்கும் உத்தரவிடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம் மற்றும் வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், அந்த உத்தரவின் அடிப்படையில் மனுதாரரின...