ஸ்டைலிஷான இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் பணிபுரிய வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது – அதிதி ஷங்கர்
ஸ்டைலிஷான இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் பணிபுரிய வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது - அதிதி ஷங்கர்
குறுகிய காலத்திலேயே தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை அதிதி ஷங்கர். இப்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கும் ’நேசிப்பாயா’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
படம் பற்றி நடிகை அதிதி ஷங்கர் கூறும்போது, “ஸ்டைலிஷான இயக்குநர் விஷ்ணு வர்தனுடன் பணிபுரிய வேண்டும் என்பது மற்ற நடிகர்களைப் போல எனக்கும் கனவாக இருந்தது.
கதாநாயகிகளை தன்னுடைய படத்தில் எப்போதும் அவர் அழகாக காட்டுவதோடு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்திலும் நடிக்க வைப்பார். முழு படப்பிடிப்பு அனுபவமும் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.
ஆகாஷ் முரளியுடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ரசிகர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவ...
