ரஜினி திடீர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு இந்த ஜோதிடரின் ஆலோசனைதான் காரணமா!?
தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் ஆன்மீகத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்.
கடவுள் நம்பிக்கை, ஆன்மீக பயணங்களில் அடிக்கடி ஈடுபடுபவர். பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் எப்படியும் அரசியலுக்கு வந்து விட வேண்டும் என காத்திருக்கும் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக கடந்த ஆண்டு தான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நல்லது செய்ய காத்திருக்கிறேன். எனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என அறிவித்திருந்தார்.
ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து ஆளாளுக்கு கருத்துக்களை அள்ளி விட்டனர்.
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த்.
இந்த ஆலோசனை குறித்து யாரும் எந்த கருத்தையும் வெளியில் குறிப்பாக மீடியா கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என்றும் அதை மீறி தகவல் வெளியானால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று ரஜினி எச்சரிக்கை...
