வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 7
Shadow

Tag: இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்

சினிமா ஷூட்டிங், தியேட்டர் திறக்க அனுமதியுங்கள் – முதல்வருக்கு பாரதிராஜா வேண்டுகோள்

சினிமா ஷூட்டிங், தியேட்டர் திறக்க அனுமதியுங்கள் – முதல்வருக்கு பாரதிராஜா வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை விவரம்.   வணக்கம் முதல்வர் அவர்களுக்கு, படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள். விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள். அதேசமயம் சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன எனத் திணறி வருகிறோம். பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாது திகைக்கின்றனர். பணம் கொடுத்தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால் நஷ்டப்பட்டுப் போய் உள்ளனர். சினிமாவை நசிந்துவிடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம். முதல்வர் அவர்கள் தயைகூர்ந்த...