சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: எடப்பாடி பழனிசாமி

தேர்தல் ஆணைய முடிவுக்காக காத்திருக்கும் அ.தி.மு.க. அணிகள்!

தேர்தல் ஆணைய முடிவுக்காக காத்திருக்கும் அ.தி.மு.க. அணிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை கைப்பற்ற தீவிரமாக களம் இறங்கினார்கள். 66 எம்.எல்.ஏ.க்களில் 63 பேரின் ஆதரவையும், மொத்தம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆதரவை தக்க வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுச்செயலாளரானார். இதுபற்றி தகவலையும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருக்கிறார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது பற்றியும் தகவல் அனுப்பி இருக்கிறார்கள். பெரும்பான்மை ஆதரவு இருப்பது பற்றியும் உரிய ஆவணங்களுடன் புகார் கொடுத்துள்ளார். அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அந்த பொதுக்குழுவே செல்லாது. கட்சியின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதையும் சுட்டி காட்டி இருக்கிறார்கள். இரு தரப்பினரின் கோரிக்கைகளையும் தேர்தல் ஆணையம் பரிசீலித்...
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி திடீர் மயக்கம்!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி திடீர் மயக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது வெயிலால் ஒரு மணி நேரம் நின்றபடி தொடர்ந்து பேசிய நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு தண்ணீர் கொடுத்து மேடையில் அதிமுகவினர் அமர வைத்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி வீடு திரும்பினார்....
கட்சி விவகாரங்கள் குறித்து இப்போது கேட்காதீங்க – பதில் அளிக்க மறுத்த ஈ.பி.எஸ்!

கட்சி விவகாரங்கள் குறித்து இப்போது கேட்காதீங்க – பதில் அளிக்க மறுத்த ஈ.பி.எஸ்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவுபசார விழாவில் கலந்துகொண்டதாக தெரிவித்தார். அப்போது, அதிமுகவின் வங்கிக்கணக்கை முடக்க வேண்டும் என ஓபிஎஸ் கடிதம் எழுதியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் அதுபற்றி பதில் அளிக்க முடியாது என்றும், வழக்குகள் முடிந்த பிறகு அதுபற்றி கருத்துகள் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். நீதிமன்றத்தில் மாறி மாறி வழக்கு போடப்படுவதால், கட்சி விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்....
எதிர்க்கட்சி துணைத்தலைவராக நத்தம் விசுவநாதன் தேர்வு?- சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்புகிறார்!

எதிர்க்கட்சி துணைத்தலைவராக நத்தம் விசுவநாதன் தேர்வு?- சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்புகிறார்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழக சட்டசபையில் 66 எம்.எல்.ஏ.க்களை கொண்ட அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருக்கிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பற்றிய பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமி வகித்து வந்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவி, ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. ஒற்றை தலைமையை தேர்வு செய்வதற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஓ.பன்னீர் செல்வம் வகித்து வந்த கட்சியின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது. கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக கூறி கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அதேநேரத்தில் ஓ.பன்னீர...
அதிமுக பொதுக்குழு விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் !

அதிமுக பொதுக்குழு விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
அதிமுக பொதுக்குழு கடந்த 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ஓ. பன்னீர் செல்வம் கூறி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் தரப்பு முறையிட்டுள்ளது. மேலும் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ், வைரமுத்து சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக உத்தரவு எதுவும் மனு எதுவும் தாக்கல் செய்யப்பட்டால் தங்கள் தரப்பு...
ராயப்பேட்டை அலுவலகத்தில் மோதல்- அ.தி.மு.க.வினர் 48 பேருக்கு போலீசார் சம்மன்!

ராயப்பேட்டை அலுவலகத்தில் மோதல்- அ.தி.மு.க.வினர் 48 பேருக்கு போலீசார் சம்மன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கடந்த 11-ந்தேதி ஏற்பட்ட கலவரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 400 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 15 பேர் அன்றைய தினமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக மற்றவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மோதல் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்து கலவரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் யார்? யார்? என்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதன்படி 48 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இவர்கள் அனைவரும் தேனி, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் நாளையும், நாளை மறுநாளும் நேரில் ஆஜராக வேண்டும் என்று போல...
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக புதன்கிழமை விசாரணை- சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு!

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக புதன்கிழமை விசாரணை- சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் கடந்த மாதம் 23-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்டது. ஆனால் 23-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவை மீறி நடந்த இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில் ஐகோர்ட்டு அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வ...
அதிமுக தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்!!

அதிமுக தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டது இதையடுத்து தனது விடுதலைக்காக போராடிய அனைவரையும், வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாக பேரறிவாளன் தெரிவித்தார். அதன்படி நேற்று சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தமது தாயாருடன் சென்று நேரில் சந்தித்த பேரறிவாளன் நன்றி தெரிவித்தார். பேரறிவாளன் சந்திப்பு குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளனை சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன். சகோதரர் பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்  என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்த...
தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்! தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல்-டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும், பொங்கல் கொண்டாட அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தேர்தல் நேரத்தில் தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாததை கண்டித்தும் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர். ...
எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி! அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும்,  எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில்  இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் பிரச்சனை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில்  இதுதொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை முடிந்த பின்னர் இன்று அவர் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது....