இத்தாலியில் எலிகளுக்கு செலுத்தப்பட்ட கொரானா தடுப்பூசியில் முன்னேற்றம்!
எலிகளுக்கு செலுத்தப்பட்ட கொரானா தடுப்பூசி - இத்தாலியில் முன்னேற்றம்
உலகம் முழுதும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரானாவுக்கு இதுவரை எந்த நாடும் மருந்து கண்டுபிடித்ததாக உறுதி செய்யப்படவில்லை.
பல நாடுகளில் தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் எதையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், உலகின் முதல் கொரானா தடுப்பூசி மருந்தை உருவாக்கியிருப்பதாக இத்தாலி கூறியிருப்பதாக பல்வேறு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாகிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி, ரோம் நகரில் உள்ள ஸ்பல்லான்ஷானி மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. முதலில் இந்த தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊசி போட்டதும் அந்த எலியில் ஆன்டிபாடிகள் உருவாகி உள்ள...
