அமெரிக்க பொருளாதாரம் தன் கைக்குள் இருக்க திட்டமிட்ட பின்லேடன்: ரகசிய தகவல் வெளியீடு!
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந்தேதி பயணிகள் விமானங்களை கடத்திய அல்-கொய்தா பயங்கரவாதிகள் அவற்றை நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரத்தின் மீதும்,
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் மோதி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர்.
இதற்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை 10 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க படைகள் பாகிஸ்தானில் வைத்து சுட்டு கொன்றன.
பின்லேடனை பிடிக்கும் பணியில் அமெரிக்காவின் நேவி சீல் படைகள் ஈடுபட்டன.
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் 2-வது தாக்குதல் ஒன்றையும் நடத்த ஒசாமா பின்லேடன் திட்டமிட்ட ரகசிய தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
பின்லேடனை உயிருடனோ அல்லது சுட்டு பிடிப்பதற்கான பணிக்காக அமெரிக்காவின் நேவி சீல் படையை ...
