புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: கஜா புயல்

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்ஜிஆர் பாணியில் கிராம பெருசுகளோடு பாசம் காட்டிய கமல்ஹாசன்!

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்ஜிஆர் பாணியில் கிராம பெருசுகளோடு பாசம் காட்டிய கமல்ஹாசன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாணியில் கிராம மக்களோடு சகஜமாக பழகி பாட்டிகளிடம் பாசத்தை கொட்டிய நடிகர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியினரோடு புயல் பாதித்த பகுதிகளில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் குறைகளை கேட்டு வருகிறார். தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை கிழக்காடு பகுதியில் டீக்கடையில் அமர்ந்து கட்சியினருடன் கமல் டீ குடித்தார். அவரை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்களுக்கு கமல் டீ வாங்கி கொடுத்தார். டீக்கடையில் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருந்தபோது பாட்டி ஒருவர் வாஞ்சையுடன் கன்னத்தை பிடித்து பேசினார். அவருடன் பாசமாக பேசிய கமல் குறைகளை கேட்டறிந்தார். மீனவர் கிராமமான ஏரிப்புறக்கரை கிராமத்திற்கு சென்ற கமல்ஹாசன் கிராமம் முழுவதையும் சுற்றிப் பார்த்தார். கமலிடம் தங்கள் குறைக...
கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு

கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திண்டுக்கல் தேனி மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இந்த புயலினால் பலர் உயிரிழந்தனர். வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன வாழை, தென்னை, கரும்பு உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் புயல் நிவாரண நிதிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி இன்று மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.1000 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. முற்றிலும் இடிந்த வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்படும். புயலில் சேதம் அடைந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.600 வீதமும், விழுந்த மரங்களை வெட்டி அகற்ற த...
கஜா புயல் இன்று கரையை  கடக்கும்போது 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு

கஜா புயல் இன்று கரையை கடக்கும்போது 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கஜா புயல் தற்போது சென்னையில் இருந்து 490 கிமீ தொலைவிலும் நாகையில் இருந்து 580 கிமீ தொலைவிலும்  நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காற்றின் அமைப்பைப் பொருத்து புயலின் வேகம் இருக்கும்.இன்று  மாலை கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது அப்போது, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது இந்த மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரை நாளை முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைபெய்யும்....
‘கஜா’ புயல் பற்றி கவலைப்படவில்லை  ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

‘கஜா’ புயல் பற்றி கவலைப்படவில்லை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைகோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று (புதன்கிழமை) மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 ஆகும். தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைகோள் ஜிசாட்-29 இதில் பொருத்தப்பட்டு உள்ளது. 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 33-வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டு ஏவப்படும் 5-வது ராக்கெட் இதுவாகும். ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின் ஆகிய 3 நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும். இதற்கான இறுதிகட்ட பணியான 26 மணி, 8 நிமிட நேர ‘கவ...
5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் – வானிலை மையம்

5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் – வானிலை மையம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. இன்று காலை இந்திய வானிலை மையம், ‘‘கஜா புயல் 5 கிலோ மீட்டர் என குறைந்த வேகத்தில் நகர்கிறது. சென்னையில் இருந்து கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரும் கஜா, 15-ந்தேதி அதிதீவிர புயலாக வலுப்பெற்று பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளது...
கஜா புயலுக்கு முன்… ரெட் அலார்ட் எச்சரிக்கையில் நாம் கவனிக்க வேண்டியது!

கஜா புயலுக்கு முன்… ரெட் அலார்ட் எச்சரிக்கையில் நாம் கவனிக்க வேண்டியது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கஜா புயல் கரையைக் கடக்கும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்! வீடு மற்றும் வீட்டின் கட்டமைப்பை பரிசோதியுங்கள். எங்கேனும் வெடிப்பு இருந்தால் பூச்சு வேலை செய்தல், கதவுகளின் தாழ்ப்பாள்களை சரி செய்தல் போன்றவற்றை துரிதமாக முடியுங்கள். வீட்டுக்கு அருகே இருக்கும் முறிந்த கிளைகள், பட்டுப்போன மரக்கிளை, அதிக எடையுடன் மரக் கிளை இருந்தால் அதனை அப்புறப்படுத்துங்கள். வீட்டு மாடி, உயரமான சுவர்களில் இருக்கும் கட்டைகள், பயன்படுத்தாத கண்ணாடி, கண்ணாடிப் பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்தவும். பேட்டரிகள், மண்ணெண்ணெய், மெழுகுவர்த்திகள், குடிநீர் கேன்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ளவும். பாதி இடிந்த நிலையில் இருக்கும் கட்டடங்களை இடித்துத் தள்ள வேண்டும். உலர்ந்த பழங்கள் போன்ற சமைக்காமல் அப்படியே சாப்பிடும் பொருட்களை வாங்க...