வியாழக்கிழமை, மே 16
Shadow

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்ஜிஆர் பாணியில் கிராம பெருசுகளோடு பாசம் காட்டிய கமல்ஹாசன்!

கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாணியில் கிராம மக்களோடு சகஜமாக பழகி பாட்டிகளிடம் பாசத்தை கொட்டிய நடிகர் கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியினரோடு புயல் பாதித்த பகுதிகளில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் குறைகளை கேட்டு வருகிறார்.

தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை கிழக்காடு பகுதியில் டீக்கடையில் அமர்ந்து கட்சியினருடன் கமல் டீ குடித்தார். அவரை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்களுக்கு கமல் டீ வாங்கி கொடுத்தார்.

டீக்கடையில் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருந்தபோது பாட்டி ஒருவர் வாஞ்சையுடன் கன்னத்தை பிடித்து பேசினார். அவருடன் பாசமாக பேசிய கமல் குறைகளை கேட்டறிந்தார்.

மீனவர் கிராமமான ஏரிப்புறக்கரை கிராமத்திற்கு சென்ற கமல்ஹாசன் கிராமம் முழுவதையும் சுற்றிப் பார்த்தார். கமலிடம் தங்கள் குறைகள் அனைத்தையும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுவரை யாரும் வரவில்லை என்றும், மக்கள் குமுறலை வெளியிட்டனர். இதுபற்றி கமல் கூறும்போது, அமைச்சர்கள் பேச்சை நிறுத்திவிட்டு வேகமான செயல்பாடுகளில் இறங்க வேண்டும் என்றார்.

ஏரிப்புறக்கரை கிராமத்தைப் பொறுத்தவரை அங்குள்ள மீனவர்கள் தங்களது படகுகள் அனைத்தையும் இழந்துவிட்டனர்

வீடுகள் இடிந்துவிட்டன. மொத்த வாழ்வாதாரமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மீன்பிடி வலைகள் கூட மிஞ்சவில்லை. நாங்கள் மீண்டுவர பல வருடமாகும் என்று மக்கள் கமல்ஹாசனிடம் குமுறலை வெளிப்படுத்தினர்.

 

353 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன