வித்தியாசமான கதையுடன் உணர்வுகளோடு விளையாட வரும் கிருஷ்ணாவின் கழுகு 2
*ஆகஸ்ட்-1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் 'கழுகு-2'..!*
கடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் 'கழுகு 2’ படம் உருவாகியுள்ளது. மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது.
இதையடுத்து இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு இந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.. த்ரில் நிறைந்த இந்த திரைப்படத்தை ரசித்துப் பார்த்த விநியோகஸ்தர்கள், யாருமே எதிர்பாராத விதமாக அமைக்கப்பட்டுள்ள கிளைமாக்ஸை பார்த்து கண்கலங்கினார்கள்.. இதில் உணர...
