வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: காளிதாஸ் ஜெயராம்

3வது படம் இயக்க தயாரான கிருத்திகா உதயநிதி!

3வது படம் இயக்க தயாரான கிருத்திகா உதயநிதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
3வது படம் இயக்க தயாரான கிருத்திகா உதயநிதி! உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா கடந்த 2013ம் ஆண்டு வெளியான ‛வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து அவர் விஜய் ஆண்டனி நடித்த ’காளி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். தற்போது அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க தயாராகி வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் காளிதாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை தன்யா நடிக்க உள்ளார். இவர் விஜய்சேதுபதியின் கருப்பன் படத்தில் நடித்து பிரபலமானவர். இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் கிரியேசன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....
ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்!

ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்! பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவரும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் அறிமுகமான இவர், பின்னர் ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ‘புத்தம் புது காலை’, ‘பாவக்கதைகள்’ போன்ற ஆந்தாலஜி படங்களிலும் நடித்து பிரபலமானார். இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இப்படத்தை வினில் வர்கீஸ் இயக்குகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நமீதா பிரமோத் நடிக்கிறார். இப்படத்திற்கு மலையாளத்தில் ‘ரஜினி’ என பெயர் வைத்துள்ளனர். ஆனால் தமிழ் தலைப்பை வெளியிடவில்லை. இப்படத்தில் காளிதாஸ், ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளதால் படத்திற்கு ரஜினி என தலைப்பு வைத்துள்ளார்களாம். தமிழில் ஏற்கனவே ரஜினி என்ற பெயரில் ஒர...